இது தெரியுமா ? இனி வங்கி கணக்குகளுக்கு இரண்டு மொபைல் நம்பர் தேவை..!
இக்காலத்தில் வங்கி கணக்குகளில் ஏற்படும் பண மோசடிகள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே வங்கி கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மற்ற வங்கிகளுடன் ஆலோசனை செய்து KYC விதிமுறைகளை கடுமையாக்க பல விதிமுறைகளை தற்போது விதித்து வருகிறது.
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. வங்கிக் கணக்கைத் திறக்கும்போது ஒரு KYC படிவத்தை நீங்கள் நிரப்புவீர்கள். இதில் கணக்கு சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர் தகவல்கள் இருக்கும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் உங்களிடம் இருந்தால் அவை அனைத்தும் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுடன் கலந்தாலோசித்து புதிய அமைப்பை பரிசீலித்து வருகிறது. அந்த விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.
இதன்படி, கணக்கு சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர் தகவல்கள் குறித்து பதிவு செய்யப்படும் KYC படிவத்தில் வாடிக்கையாளர்கள் இரண்டு மொபைல் எண்களை வழங்க நேரிடும். மேலும் அனைத்து கணக்குகளின் தகவலையும் ஒருங்கிணைக்கும் கொள்கையும் செயல்படுத்தப்படலாம்.
ரிசர்வ் வங்கியின் இந்த விதியானது ஒரே எண்ணை பல கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இப்போது KYC படிவத்தில் மேலும் ஒரு மொபைல் எண்ணைச் சேர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இன்னொரு மொபைல் எண்ணைக் கணக்கில் சேர்க்க வேண்டும். நிறையப் பேருக்கு இது பிரச்சினையை ஏற்படுத்தலாம்.