சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்..!
புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி காணாமல் போன ஆர்த்தி என்கிற 9 வயது சிறுமி கழிவுநீர் வாய்க்காலில் சாக்குமூட்டையில் படுகொலை செய்யப்பட்டு இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியானதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதை அடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் குற்றவாளிகளை பிடித்து எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு சுமுக பேச்சு வார்த்தைக்கு பிறகு படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.