இன்று தி.மு.க.-காங். இடையே தொகுதி உடன்பாடு..!
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றிய முதற்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 28 ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டிருந்தது. இதையடுத்து, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது.
நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக விருப்ப 5 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 12 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திமுக – காங்கிரஸ் இடையே இன்று மாலைக்குள் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் என எதிர்ப்பார்க்கபட்டுகிறது. இதற்காக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் இன்று தமிழ்நாடு வர உள்ளார். இன்று மாலைக்குள் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.மேலும், எந்த எந்த தொகுதிகள் என்பது குறித்து இன்று இரவுக்குள் முடிவு செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில் 10 தொகுதிகள் வரை திமுக கூட்டணியில் ஒதுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுகிறது.