படுக்கை அறையில் வெங்காயம் வெட்டி வைத்தால் நோய் கிருமிகள் அண்டவே அண்டாது என்பது உண்மையா ?

1919ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். அப்போது பரவிய ஒரு காய்ச்சலால் 40 மில்லியனுக்கும் மேல்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். மருத்துவ உலகமே குழம்பிய நிலையில், ஒரு ஏழை விவசாயின் குடும்பத்தை மட்டும் இந்த காய்ச்சல் தீண்டவில்லை. இது மருத்துவர்களுக்கு வியப்பைத் தர, அந்த ஏழை விவசாயியின் வீட்டுக்கு போயிருக்கிறார்கள். அப்போது அந்த வீட்டின் ஒவ்வொரு அறையிலும் வெங்காயத் துண்டுகள் இருந்தது.

இதைப் பற்றிக் கேட்டபோது அந்த விவசாயி, நாங்கள் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் இப்படி வெங்காயத்தை இரவில் வெட்டி வைத்து விட்டு, காலையில் தூக்கி எறிந்து விடுவோம் என சொல்லியிருக்கிறார்கள். மருத்துவர்கள் அந்த வெங்காயத் துண்டுகளை எடுத்து ஆராய்ச்சி செய்தனர். அதில் ஏராளமான பாக்டீரீயாக்கள் இருந்தன. அந்த அறையில் இருந்த அனைத்து கெட்ட பாக்டீரீயாக்கள், வைரஸை அது ஈர்த்து இருந்தது தெரியவந்தது.

இதேபோல் தூங்கும் முன் பெரிய வெங்காயத்தை இரண்டு துண்டாக வெட்டி தலைமாட்டில் வைத்து உறங்கினால் அந்த அறையில் இருக்கும் பாக்டீரீயா, வைரஸை உறிஞ்சிவிடும். இதை மட்டும் செய்து பாருங்க. அப்புறம் நோய்கிருமிகள் உங்களை அண்டவே அண்டாது.

இந்தக் கதை உண்மைதானா ?

இந்தக் கதை உண்மையா என்பதற்கு தகுந்த சான்றுகள் இல்லை… ஆனால் வெங்காயம் கிருமி நாசினி என்பது உண்மை. பொதுவாக அம்மை நோய் வந்தால் கழுத்தைச் சுற்றி சின்ன வெங்காய மாலை அணிவித்துவிடுவார்கள். நீங்கள்கூட அதைப் பார்த்து இருப்பீர்கள்… ஏனென்றால் சின்ன வெங்காயத்துக்கு நோய்க்கிருமியைக் கட்டுப்படுத்தும் மகிமை இருக்கிறது. இப்போது வெளிநாட்டில் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு இருக்கும்போதோ அல்லது நோய் ஏற்பட்ட வீட்டிலிருந்து அது மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும் தடுப்பாகவோதான் இதனைச் செய்ய வேண்டும். அம்மை ஏற்பட்ட வீட்டின் வாசலில் வேப்பிலை கட்டி வைத்திருப்பதும் இந்த அடிப்படையில்தான்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *