இது தெரியுமா ? இரவு தூங்க செல்வதற்கு முன் கடுக்காய்த் தூளை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால்…
காலையில் இஞ்சி சாறு மாலை சுக்கு காபி இரவில் நாம் உறங்குவதற்கு முன்னர் கடுக்கைகாயை விதை நீக்கி விட்டு அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அதை நன்கு கொதிக்க வைத்து நாம் அருந்த வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் நம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் மலச்சிக்கல் அனைத்தும் நீங்கிவிடும். நம் உடலில் தேங்கி இருக்கும் நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரன் ஆகலாம்,கிளவியும் குமரிகள் ஆகலாம் என்பதை அதன் பொருள். இதில் கடுக்கை காயின் பலன் அதிகம்.
நம் முன்னோர்களின் சித்தர்கள் சொன்னபடி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நம் வாழ்வின் நீண்ட ஆயுளை தரக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்கள் இருக்கிறதாகவும் அவற்றை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் இருக்கும் நோய் விலகும் பிற்காலத்தில் நோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள்.
மேலும் நம் உடலில் இருக்கும் செல்களை புதுப்பிக்க, உடலை வலுவாக்க, நம் இளமையாக இருக்க செய்யும். பழமொழியில் சொல்லப்பட்ட கல்பங்களில் இஞ்சி,சுக்கு,கடுக்கைகாய் ஆகியவற்றின் கல்பங்கள் செய்து 48 நாட்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் நம் உடலில் சர்க்கரை நோய், இதய நோய்,உள்ளிட்ட பல்வேறு நோய்களை கட்டுக்குள் இருக்கும். நம் உடலில் இருக்கின்ற நச்சுகள் அனைத்தும் வெளியேறும்.
இஞ்சி,சுக்கு, கடுக்கைகாய் செய்யப்படும் கல்பங்கள் ஆண், பெண் சாப்பிட்டால் இருவரும் உறவை பலப்படுத்தும் குழந்தை பாக்கியம் தரக்கூடியவை. கம்ப்யூட்டர் ஆபீஸ் ஸ்கூல் இருக்கும் வரை இருக்கையில் அமர்ந்து பணி செய்வது என்றால் சில நபர்களுக்கு ஆண்மை தன்மை புரிவதாக சொல்லுகின்றனர். இந்த பாதிப்பு உள்ளவர்கள் இந்த மூன்று கால்களும் தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு நல்லபயன் அளிக்கும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டு தந்து குழந்தை பேரு பாக்கியம் கிடைக்க வழி செய்யும். நாம் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம் மதிய உணவு சாப்பிட்ட பின் சுக்கு கல்பம் இரவில் தூங்கும் முன் கடுக்காய் கல்பம் என இவை மூன்றையும் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் அடுத்த சில மாதங்களில் நாம் குடும்பத்திற்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இந்த 48 நாட்களில் கருமுட்டை உடையும் நாட்களில் மட்டும் ஆண் பெண் இருவரும் ஒன்று சேரலாம். மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் போன்ற மற்ற உணவுகளை தவிர்க்கவும் அப்படி தவிர்த்துவிட்டு கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ, முருங்கை கீரை, மிளகு தக்காளி கீரை, போன்றவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
கடுக்கை காயின் தோளில் தயாரிக்கப்படும் கசாயம் நம் வாய் புண் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையாக அளிக்க பயன்படுகிறது. வாயின் உட்பகுதியில் புண்கள் மற்றும் தொண்டை எரிச்சல், ஈறுகளில் ரத்தப்போக்கு, பற்களின்கரைகள், அல்சர்,போன்ற வாயில் பிரச்சனைகளுக்கு இந்த கடுக்காய் தோலில் இருக்கும் மருத்துவ குணங்கள் அவற்றையெல்லாம் சரி செய்கின்றன. கடுக்கைகாய் பொடி செய்து இப்படியும் பயன்படுத்தலாம்.
நம் உடலில் கட்டிகல்,மூலம், கல்லீரல், மண்ணீரல், வீக்கம், குடல் புழுக்கள், போன்ற உட்புற பிரச்சினைகளை கடுக்காய் சாப்பிடுவதனால் இவற்றை குணப்படுத்தவும் சரி செய்யும் பயன்படுகிறது. கீழ்வாதம் சிகிச்சைக்கு கடிக்காயை நன்கு பொடி செய்து அதனுடன் வெள்ளம் சேர்த்து கலந்து உட்புறமாக எடுத்துக் கொள்ளவும். அமிலத்தன்மை உள்ள சமயங்களில் அரை டீஸ்பூன் கடுகை பொடியை பாலில் கலந்து சாப்பிடலாம்.
கடுக்காய் உடல் கழிவை வெளியேற்றும். மலம் உடலில் தங்காமல் வெளியேற்ற தூண்டும். வாய்வு பிரச்சனைகளை போக்கும். மூலப்பிரச்சனை கடுமையாக இருந்தால் கூட அதை சரிசெய்யும் குணம் கடுக்காய்க்கு உண்டு.
சளி இருமல் காய்ச்சல் தொண்டை வலி தொண்டைப்புண் மூச்சு குழாய் அலர்ஜி சைனஸ் தொற்று காது தொற்று இவை அனைத்திற்கும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்த நோயிலிருந்து குணமடைய நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் அவசியம். கடுக்காய் பொடி செய்தும் அப்படியே சாப்பிட்டு வந்தால் நம் உடலின் பல்வேறு வகையான தொற்று நோய்களுக்கு எதிராக போராட செய்யும்.
நம்மில் சிலர் பேருக்கு கண் நோய்கள் இப்போதெல்லாம் மிகவும் பொதுவானவை இதற்கு காரணம் சரியான உணவு முறை எடுத்துக் கொள்ளாததால் ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் நம் பலரின் கண் பிரச்சனை அவைப்படுகின்றனர். இதனால் கடுக்காய் தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் நம்முடைய கண்பாரை நன்றாக தெரியும் பார்வைகள் மேம்படும் கண்புரை, கிளௌகோமா, மாகுலர் சிதைவு போன்றவற்றை குணப்படுத்துகின்றன.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் ஐந்து கிராம் கடுக்காய்த் தூளை எடுத்து, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் (48 நாள்கள்) சாப்பிட்டுவந்தால் செரிமானக் கோளாறுகள் விலகும்; மலச்சிக்கல் குணமாகும்.
கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு சோம்பு (பெருஞ்சீரகம்) சேர்த்து மண் சட்டியில் தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும்.
மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிக்கும்; மலச்சிக்கல் விலகும்; உடல் பலம் பெறும்.
இப்படிப் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் கடுக்காய், உடல் பலவீனத்தைப் போக்கும்; ஆண்களின் உயிரணு குறைபாடுகளை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைத் தரும்.