இது தெரியுமா ? வெந்தயத்தை பொன் நிறமாக வறுத்து அதன் கூட சம அளவுக்கு கோதுமை சேர்த்து பொடி செய்து …
வெந்தயம் கசப்புத்தன்மையாக இருப்பதால் குழந்தைகள் அதை அதிகம் விரும்பமாட்டார்கள். ஆனால் அதன் நன்மைகளை அறிந்த நம்முடைய பாட்டிகளும், அம்மாக்களும்தான் அதை எப்படியாவது சமையலில் பயன்படுத்தி சாப்பிட வைத்து விடுவார்கள். வயிறு பொருமல், உடல் சூடு, வயிற்று வலி, பேதி போன்றவைகளுக்கு வெந்தயம் அருமையான மருந்தாகும்.
வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை அடங்கியுள்ளது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து உட்கொள்வதால், பலவிதமான நோய்களுக்கு பயனுள்ள இயற்கை தீர்வாக மாற்றுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்: வெந்தயத்தில் இயற்கையாகவே ஆன்டாக்சிட் உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு, அமிலத்தன்மை, வயிறு வீக்கம் மற்றும் வாயு தொந்தரவு போன்ற பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது. இதற்கு ஊறவைக்கப்பட்ட வெந்தயத்தின் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்த தீர்வாக அமையும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரியும் வெந்தயத்தை ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். காலையில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
வயிற்றில் அமிலத்தன்மை உள்ளவர்கள் இரவில் 1 டீ ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்த வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் நெஞ்செரிச்சல், எதிக்களித்தல் போன்ற அமிலத்தன்மை பிரச்சினைகளை விரட்ட முடியும்.
வெந்தயம் உங்க செரிமானத்திற்கு உதவுகிறது. அஜூரணம் போன்ற கோளாறுகளை போக்கி உணவு நல்ல செரிமானம் ஆக குடலியக்க செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. வெந்தயம் சூட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டு இருப்பதால் மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளை களைகிறது.
நீரில் ஊற வைத்த வெந்தயம் உங்க கொழுப்பை குறைக்க உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் கொழுப்பைக் குறைத்து உங்க உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
முடி மற்றும் சரும ஆரோக்கியம்: வெந்தயத்தில் உள்ள டியோஸ்ஜெனின், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், சேதமடையாமல் வைத்திருக்கவும் உதவுகிறது.
வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கும். சிறுநீரை பெருக்கும். துவர்ப்புத் தன்மை உடையது. விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியைக் கூட்டும். நரம்புகளைப் பலப்படுத்தும். வெந்தையக்கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டது. கீரையை சப்பாத்தி மாவுடன் சேர்த்து கீரை சப்பாத்தியாக சாப்பிடலாம். தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும். வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் பலம் பெறும் உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும்.
வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய் வறுத்து பொடியாக்கி உணவுடன் உண்ண வயிற்று வலி தீரும். இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும். வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிடவும்.
ஆயுர்வேத சித்த மருத்துவம் வைத்தியசாலையில் இந்த வெந்தயம் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நம் உடலில் சீதபேதி, மூலநோய், முடி உதிர்தல், தோல் நோய், வாய்வு தொல்லை இவைகள அனைத்தையும் போக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது.
வெயில் காலங்களில் நம் உடலில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். எனவே உஷ்ணப் பிரச்சினையை ஏற்படாமல் அதை தவிர்க்க மூன்று ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து இரவில் தூங்குவதற்கு முன் வெந்தயத்தை ஊற வைத்து மறுநாள் காலையில் எழுந்தவுடன் அந்த தண்ணீரை நம் வெறும் வயிற்றுடன் குடித்தால் நம் வயிறும் உடம்பும் நல்ல குளிர்ச்சியாக இருக்கும்.
வெந்தயத்தை பொன் நிறமாக வறுத்து அதன் கூட சம அளவுக்கு கோதுமை சேர்த்து பொடி செய்து நீரில் கலந்து டீ,காபி, பதிலாக இவற்றை குடித்து வந்தால் நம் உடலின் வெப்பம் சற்று குறையும்.
தற்போது ஒரு சிலர் நபர்களுக்கு அடிக்கடி பித்தமயக்கம் வாந்தி ஏற்படும்.இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரையை நன்றாக வேக வைத்து அதனை உனவுடன் சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம் வாந்தி, பேதிகள், அனைத்தும் குணமடையும்.
வெந்தயக் கீரையை தோசை, இட்லி, உப்புமா, உடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் நம் உடலில் இருக்கும் வலிகள் இருந்தாலும் அனைத்தும் நீங்கிவிடும் வெந்தயக்கீரையின் கருணைக்கிழங்கும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் மெல்லியாக இருப்பவர்கள் கொஞ்சம் வலிமையாக உடல் எடை கூடும் வாய்ப்புகள் உண்டு.