கார் பிரியர்களுக்கு குட்நியூஸ்.. அதிரடியாக விலை குறைந்த மாருதி S-Presso கார்!

நீண்ட நாளாக புதிய கார் வாங்க வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் குறிப்பாக மாருதி சுசூகியின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரான எஸ்-பிரஸ்ஸா (S-Press o) வாங்கும் யோசனை உள்ளதா? அப்படியென்றால் இதுதான் சரியான நேரம். நான்கு இருக்கைகள் கொண்ட S-Presso காரின் விலையில் ரூ.5000 குறைத்துள்ளது மாருதி நிறுவனம். இதன் மூலம் ரூ.5.71 முதல் ரூ.6 லட்சத்திற்குள் இந்தக் காரை நீங்கள் வாங்க முடியும்.

S-Presso காரின் VXi (O) AMT மற்றும் VXi+ (O) AMT ஆகிய மாடல்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி விலை பொறுந்தும். இக்காரின் மீதமுள்ள மாடல்களின் விலை குறைக்கப்படாததால் ஏற்கனவே அறிவிக்கபட்ட விலைகளிலேயே அவை விற்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குறைந்த விலையில் இந்தக் காரை வாங்க வேண்டும் என விரும்புகிறவர்கள் உடனடியாக மாருதி சுசூகியின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம் அணுகவும் அல்லது மாருதியின் அதிகாரப்பூர்வ இணைதளத்தை தொடர்பு கொள்ளவும்.

S-Presso காரில் எத்தனை மாடல்கள் உள்ளன?

மாருதி S-Presso கார் Std, LXi, VXi, மற்றும்VXi (O) என நான்கு மாடல்களில் 2019-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. இக்காரின் அரம்ப விலை ரூ.4.26 லட்சமாகும். S-Presso காரின் உச்சபட்ச மாடலின் விலை ரூ.6.11 லட்சமாகும்.

S-Presso காரில் உள்ள வசதிகள்:

சிறந்த மைலேஜ் மற்றும் காம்பேக்ட் டிசைனிற்கு பெயர் பெற்ற S-Presso காரில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் இருக்கின்றன. பலவித செயல்பாடுகளுக்கு உதவும் வகையிலான ஸ்டீரிங் வீல், ஆட்டோமெட்டிக் ஏசி, இரு கரைகளிலும் பார்க்கிங் சென்ஸார், பவர் விண்டோ, 7 இன்ச் ஸ்மார்ட் ப்ளே ஸ்டூடியோ தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், காரோடு எல்லா சாதனங்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான வயர்லெஸ் தொழில்நுட்பம் என இக்காரிலுள்ள வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம்.

இக்காரின் பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரான இதில் ஏபிஎஸ் மற்றும் EBD வசதிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஏர்பேக், முழுமையான வழிகாட்டுதலுடன் கூடிய பார்க்கிங் சென்ஸார் போன்றவையும் உள்ளது.

இஞ்சின் ஆப்ஷன்:

S-Presso காரின் இஞ்சின் ஆப்ஷனைப் பொறுத்தவரை, 1.0 லிட்டர் K10 பெட்ரோல் இஞ்சின் இக்காருக்கான பவரை தருகிறது. இந்த இஞ்சின் சிறந்த பெர்ஃபார்மன்ஸை தருவதோடு நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு சிறந்த மைலேஜ் திறனையும் கொண்டுள்ளது. பல வாடிக்கையாளர்கள் இந்த காரை விரும்பி வாங்குவதற்கு இதன் மைலேஜ் முக்கிய காரணமாகும். சிஎன்ஜி (CNG) இஞ்சின் அப்ஷனிலும் வரும் S-Presso, வாடிக்கையாளர்களுக்கு 32.73கி.மீ வரை மைலேஜ் தருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *