அடிக்கடி வெளிநாடு செல்பவரா நீங்கள்? கூகுள் பேவில் இதை செய்தால் போதும்!
இந்தியாவைத் தவிர யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் என்று அழைக்கப்படும் UPI சேவைகள் பல்வேறு நாடுகளில் தற்போது கிடைக்கிறது. அவற்றில் இலங்கை, மொரிஷியஸ், பூட்டான், ஓமன், நேபால் பிரான்ஸ் மற்றும் UAE போன்ற நாடுகள் அடங்கும்.
NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட் லிமிடெட் (NIPL) QR- அடிப்படையிலான UPI பேமெண்ட்களை 10 தென் கிழக்கு ஆசிய நாடுகளில் எனேபிள் செய்வதற்காக பிற நாடுகளுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
இந்த பட்டியலில் மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், கம்போடியா, தென் கொரியா, ஜப்பான், தைவான் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் யுனைடெட் கிங்டம், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் UPI சேவைகளை கொண்டு வருவதற்காக இந்தியா முயற்சி செய்து வருகிறது.
அதாவது ஒருவேளை நீங்கள் இந்த வெளிநாடுகளுக்கு பயணம் செல்கிறீர்கள் என்றால் இந்திய ரூபாயை அங்குள்ள லோக்கல் கரன்சியாக நீங்கள் மாற்ற தேவையில்லை. வெறுமனே உங்களுடைய போனில் உள்ள அப்ளிகேஷன்களை பயன்படுத்தி UPI மூலமாக பணத்தை செலுத்தலாம். இந்த சேவைகளை உங்கள் பயணத்திற்கு முன்பு எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
சர்வதேச பயணத்திற்கு முன்பு UPI பேமெண்ட்களை ஆக்டிவேட் செய்வதற்கான படிகள்:-
UPI அப்ளிகேஷனை திறந்து அதில் உங்களுடைய ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யுங்கள். பேமெண்ட் செட்டிங்ஸ் பிரிவின் கீழ் உள்ள UPI International என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
சர்வதேச UPI பேமெண்ட்களுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் பேங்க் அக்கவுண்டுக்கு அடுத்து இருக்கக்கூடிய ஆக்டிவேட் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆக்டிவேஷனை உறுதி செய்வதற்கு உங்களுடைய UPI PIN நம்பரை என்டர் செய்யவும்.
Google pay பயன்படுத்தி சர்வதேச பேமெண்ட்களை செய்வது எப்படி?
Google Pay அப்ளிகேஷன் ஐ திறந்து Scan QR code என்பதை கிளிக் செய்யவும். சர்வதேச வியாபாரியின் QR கோடை ஸ்கேன் செய்யுங்கள். செலுத்த வேண்டிய தொகையை வெளிநாட்டு பண மதிப்பில் என்டர் செய்யவும்.
சர்வதேச வியாபாரிக்கு நீங்கள் பணம் செலுத்த விரும்பும் வங்கி கணக்கை தேர்வு செய்யவும். “UPI International” என்பதை இப்பொழுது நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். UPI International என்பதை கிளிக் செய்யுங்கள்.
UPI International ஆதரவு அளிக்கக்கூடிய வங்கி கணக்குகளுக்கு நீங்கள் சர்வதேச ட்ரான்ஷாக்ஷன்களை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது உங்கள் வங்கி கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்ட பணம் இந்திய ரூபாய் மதிப்பில் இருக்கும். அதாவது நீங்கள் செய்த ட்ரான்ஸ்ஷாக்ஷனில் இந்திய பணத்தை வெளிநாட்டு பணமாக மாற்றியதற்கான கட்டணம் மற்றும் வங்கி கட்டணம் போன்ற கட்டணங்கள் சேர்க்கப்படும்.