பொதுத்தேர்வு எழுதிய மாணவகள் – கயிறு கட்டி ஏறி ‘பிட்’ வழங்கிய உறவினர்கள், நண்பர்கள்! – ஷாக் வீடியோ
ஹரியானாவில் உயிரை பணயம் வைத்து கயிறு கட்டி கட்டடத்தின் மீது ஏறி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ‘பிட்’ வழங்கிய காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டாரு பகுதியில் உள்ள சந்திரவதி என்ற பள்ளியில் தேர்வு தொடங்கியதும் வினாத்தாள் கசிந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் உயிரை பணயம் வைத்து, மாணவர்கள் காப்பி அடிக்க உதவி புரிந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், உரிய விசாரணைக்கு நடத்துவதாக மாவட்ட கல்வி அதிகாரி பரம்ஜித் சாஹல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாஜக ஆளும் மாநிலத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கூட முறைகேடு நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.