மருத்துவரான 3 அடி உயர இளைஞர்… உலகை திரும்பி பார்க்க வைத்த தன்னம்பிக்கை!

குஜராத்தில் மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் மருத்துவராகி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

குஜராத்தின் பாவ் நகரை சேர்ந்த கணேஷ் பாரையா 72 சதவீத உயர குறைப்பாடுடன் பிறந்தவர். 3 அடி உயரம் மட்டுமே இருக்கும் கணேஷிற்கு மருத்துவராக வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. ஆனால் அவரது உயரத்தை மட்டும் கணக்கிட்டு, அவர் மருத்துவராக முடியும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் நம்பவில்லை.

அவசர சிகிச்சைகளை இவரால் கையாள முடியாது என்ற காரணத்தை கூறி, 2018ம் ஆண்டு கணேஷிற்கு மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது. ஆனால், கணேஷின் பள்ளி முதல்வர் உறுதுணையாக இருந்ததால், ‘குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா?’ என்ற கேள்வியை எழுப்பி சட்ட போராட்டத்தை ஆரம்பித்தார்.

இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அவரை பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க அனுமதியும் அளித்தது. இதையடுத்து, பின் 2019இல் கல்லூரியில் சேர்ந்த அவர் MBBS படிப்பை முடித்தார்.

தற்போது பாவ்நகரில் உள்ள பொது மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை நாற்காலி மேல் ஏறி நின்று சிகிச்சை பார்க்கும் மருத்துவர் கணேஷை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து வியக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *