திணறும் பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடு ஐடி நிறுவனங்கள்.. தண்ணீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு..?!

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் உள்ள டெக் பார்க்குகள், ஐடி மற்றும் டெக்னாலஜி கம்பெனிகள், சாப்ட்வேர் டெவலப்மென்ட் மற்றும் ரிசர்ச் சென்டர்களை உறுப்பினர்களாகக் கொண்ட பெங்களூருவின் அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து கவலை தெரிவித்துள்ளது.

கேஆர் புரத்தில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான 17 கிலோமீட்டர் சாலை தான் இந்த அவுட்டர் ரிங் ரோடு. இதையொட்டியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கோடைக்காலம் ஆரம்பிப்பதற்குள் இந்த நிலைமை இருப்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கத்தின் செயல்பாட்டு மேலாளர் கிருஷ்ண குமார் கவுடா கூறுகையில், ஒட்டுமொத்த குடிநீர் பற்றாக்குறை, வீடுகள், அலுவலக வளாகங்கள் மற்றும் நிறுவன வளாகங்களை பாதிக்கிறது.

பொறுப்பான குடிமக்கள் என்ற முறையில், அனைத்து நிறுவனங்களும், தொழில்நுட்ப பூங்காக்களும் தண்ணீரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக பெங்களூரு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத் துறைக்கு அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளது.

பெங்களூருவின் தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

பெங்களூருவின் மொத்த ஐடி வருவாயில் அவுட்டர் ரிங் ரோட்டில் உள்ள ஐடி நிறுவனங்கள் 22 பில்லியன் டாலர் அல்லது 32 சதவிகிதம் பங்களிக்கின்றன. சென்ட்ரல் சில்க் போர்டு முதல் கேஆர் புரம் வரையிலான 17 கிமீ அவுட்டர் ரிங் ரோடு பகுதியை தனி நகராட்சி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என நாஸ்காம் உள்ளிட்ட தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ரியல் எஸ்டேட்டில் உள்ள கார்ப்பரேட்கள் ஹெப்பாள் முதல் சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான 30 கிமீ அவுட்டர் ரிங் ரோடு நீளத்தின் நிர்வாகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பான அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கத்தின் அறிக்கையின்படி, டெக் காரிடாரில் 500 நிறுவனங்களில் 9.5 லட்சம் பேர் பணிபுரிகின்றனர், பெங்களூருவின் வருடாந்திர ஐடி வருவாயில் 36 சதவீதம் ($32.68 பில்லியன்) கேஆர் புரத்தில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரையிலான அவுட்டர் ரிங் ரோடு பிரிவில் அமைந்துள்ள கம்பெனிகளிடம் இருந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரின் தொழில்நுட்பத் துறையின் நரம்பியல் மையமாகச் செயல்படும் அவுட்டர் ரிங் ரோடு பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.

பெங்களூருவின் டெக் காரிடாரில் போக்குவரத்து நெரிசலால் ஆண்டுக்கு $15 பில்லியன் செலவாகிறது.

கர்நாடக அரசுக்கு அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் சமீபத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ‘பிராண்ட் பெங்களூரு’ பிரசாரத்தின் ஒரு பகுதி மணிகண்ட்ரோலிடம் உள்ளது.

அவுட்டர் ரிங் ரோடில் சராசரி பீக் ஹவர் வேகம் மணிக்கு 4.4 கிமீ ஆக உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து நெரிசல் வரிசை மிக நீளமாக நீடிக்கிறது.

கனமழையின் போது பெல்லந்தூர், மாரத்தஹள்ளி, சர்ஜாபூர் சாலை போன்ற பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 30, 2022 அன்று அவுட்டர் ரிங் ரோடில் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக ரூ.225 கோடி வருவாய் இழப்பை அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சந்தித்ததாக அதன் சங்கம் முறையிட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *