மாஸ்டர் ஆஃப் ஸ்பின்.. புகழ்ந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான்.. நிரூபித்த அஸ்வின்.. ஒரே ஓவரில் டபுள் சம்பவம்!
100வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வினை மாஸ்டர் ஆஃப் ஸ்பின் என்று ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் நிரூபித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் மூலமாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், 100 டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனால் பலரும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் பேசுகையில், உலகின் அனைத்து மைதானங்களில் அஸ்வின் ஒரு ஸ்பின் மாஸ்டர் என்பேன். அவர் எப்போதும் ஒரு அசாத்திய கிரிக்கெட்டர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருக்கு பயிற்சியளிக்க இரு ஆண்டுகள் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் எப்போதும் கிரிக்கெட் பற்றி தியரிகள் மற்றும் பல்வேறு தத்துவங்களை கொண்டுள்ளார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு பவுலராக அவர் வளர்ந்து கொண்டே இருப்பதாக பாராட்டியுள்ளார்.
கடந்த முறை பார்டர் கவாஸ்கர் டிராபியின் போது ஆஸ்திரேலியா மண்ணிலேயே அஸ்வின் மேஜிக் செய்தார். இந்த நிலையில் ரிக்கி பாண்டியா வாழ்த்தியதற்கு ஏற்ப அஸ்வின் தனது 100வது டெஸ்ட் போட்டியில் தான் ஒரு ஸ்பின் மாஸ்டர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார். இந்த போட்டியில் முதல் 6 ஓவர்களில் அஸ்வின் சரியான லைன் மற்றும் லெந்தை கண்டுபிடிக்க முடியாமல் கொஞ்சம் கூடுதலாக ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இதன்பின் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, அஸ்வின் மீண்டும் அட்டாக்கில் வந்தார். அப்போது அதிரடியாக ரன்கள் குவிக்க முயன்ற ஆல் ரவுண்டர் டாம் ஹார்ட்லியை 6 ரன்களிலும், மார்க் வுட்டை டக் அவுட்டாகியும் வெளியேற்றினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் மாஸ் சம்பவத்தை நிகழ்த்தியுள்ளார்.
100வது போட்டியில் களமிறங்கிய அஸ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். டெய்லண்டர்களுக்கு பெரியளவில் வித்தியாசமாக யோசிக்காமல் சாதாரணமாக அவுட்சைட் ஆஃப் திசையில் ஸ்பின் செய்ய, அது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பெற்று கொடுத்துள்ளது. இதனால் பலரும் அஸ்வினை பாராட்டி வருகின்றனர்.