ஐந்தில் நான்கு பெண் பயிற்சியாளர்களுக்கு பாலியல் தொந்தரவு.. அதிர வைக்கும் ரிப்போர்ட்
விளையாட்டுத் துறையில் உள்ள பெண் பயிற்சியாளர்களில் ஐந்தில் நான்கு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. கிக் இட் அவுட் என்ற அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது.
இதில் விளையாட்டு உலகில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 115 பயிற்சியாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றார்கள்.
இதில் சுமார் 80 சதவீதத்திற்கும் மேலான பயிற்சியாளர்கள் பொது தொண்டு நிறுவனங்களின் மூலம் தான் ஊதியம் வாங்குவதாக கூறியிருக்கிறார்கள். இதில் குறிப்பாக பெண்கள் பயிற்சிக் களத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பதாகவும்,வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாகவும் கூறி இருக்கிறார்கள்.
தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை சுமார் 70 சதவீதம் பேர் மேலிடத்தில் புகார் அளிக்க விரும்பாமல் இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் பங்கேற்ற 54 சதவீத பெண் பயிற்சியாளர்கள் தாங்கள் பெண் என்பதால் பல இன்னல்களை சந்திக்க நேரிடுவதாக கூறி இருக்கிறார்கள்.
ஆணாதிக்க கருத்துக்கள் இங்கு அதிகம் இடம் பெறுவதால் பலர் பயிற்சியை விட்டு சென்றிருப்பதாகவும் கூறி இருக்கிறார்கள். மேலும் 48 சதவீத பெண் பயிற்சியாளர்கள் பலருக்கு இந்தப் போட்டியை குறித்து உங்களுக்கு என்ன தெரியும்? உங்களுக்கு கால்பந்து குறித்து அறிவு இருக்கிறதா என்று கேள்விகள் எல்லாம் சந்தித்து இருப்பதாகவும் கூறியுள்ளனர். பயிற்சியாளராக சாதிக்க வேண்டும் என்று பல பெண்கள் வந்து இருந்தாலும் அவர்களுக்கு பல பிரச்சனைகள் களத்தில் ஏற்படுவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.