என்னங்க இந்த பையன் தோனி மாதிரியே பண்றாரு! குல்தீப் யாதவ்க்கு பிளான் போட்டு தந்த துருவ் ஜூரல்
இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் குல்தீப் யாதவ்க்கு பிளான் போட்டு கொடுத்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சாளர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும்.
பேட்ஸ்மேன் அடுத்தது என்ன செய்வார் என்பதை கணித்து பவுலர்களுக்கு திட்டம் போட்டுக் கொடுப்பார். இதனை பவுலர்கள் அப்படியே கடைப்பிடிப்பார்கள்.இதில் 90 சதவீதத்திற்கு மேல் விக்கெட்டுகள் விழும்.
2017 ஆம் ஆண்டில் எல்லாம் குல்தீப், சாகல் நம்பர் ஒன் பவுலர்களாக இருந்ததற்கு முக்கிய காரணம் தோனியின் இந்த ஆலோசனைகள் தான். ஒரு கட்டத்தில் தோனி அணியை விட்டு சென்றவுடன் குல்தீப் யாதவ்,சாஹல் ஆகியோர் தங்களுடைய மகிமையை இழந்தார்கள். இந்த நிலையில் ரிஷப் பந்த், இசான் கிஷன் போன்ற வீரர்கள் எல்லாம் விக்கெட் கீப்பராக வந்தாலும் தோனியை போல் யாராலும் பவுலர்களுக்கு ப்ளான் போட்டு கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் துருவ் ஜூரலை நடப்பு தொடரில் தான் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகியிருக்கிறார். ஏற்கனவே தன்னுடைய திறமையை பேட்டிங்கில் நிரூபித்த துருவ் ஜூரலை தற்போது தனக்கும் தோனியை போல் கிரிக்கெட் அறிவு இருக்கிறது என்று காட்டியிருக்கிறார். தர்மசாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் போப் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது போப் விளையாடிய விதத்தை நன்று கவனித்தார் ஜூரல்.
அப்போது ஆட்டத்தின் 25. 2 வது பந்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல், போப் இறங்கி வந்து ஆடுகிறார். எனவே அதற்கு ஏற்ப பந்து வீசுங்கள் என்று கூறினார். இதனை கேட்டுக்கொண்ட குல்தீப் யாதவ் அடுத்த பந்தை வீசும் போது போப் இறங்கி வந்துவிட்டார்.இதனை அடுத்து சுலபமான முறையில் துருவ் ஜூரலை அவரை ஸ்டம்பிட் ஆக்கினார் .
இது ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்து இருக்கிறது. தோனி எவ்வாறு விக்கெட்டுகளை எடுக்க பவுலர்களுக்கு உதவுவாரோ அதைப்போல் ஜூரல் செய்வதாக ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இவ்வளவு நாள் எங்கு இருந்த தங்கம் என்று பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.