ஏடன் வளைகுடாவில் பதற்றம்: சரக்கு கப்பலை இலக்கு வைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
ஏடன் வளைகுடாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணையால் சரக்கு கப்பல் ஒன்று தாக்கப்பட்டுள்ளதோடு மூவர் கொள்ளப்பட்டுள்ளனதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அதில் இருந்த 21 பணியாளர்களை இந்திய போரக்கப்பலான ஐஎன்ஏஎஸ் கொல்கத்தா மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, மீட்கப்பட்டவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குவதாகவும், அவர்களில் ஒருவர் ஏவுகணை தாக்குதலால் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏவுகணை தாக்குல்
மார்ச் 6 ஆம் திகதியன்று பார்படோஸில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த சரக்கு கப்பல், ஏடனுக்கு தென்மேற்கே 55 கடல் மைல் தொலைவில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இந்த தாக்குதலில் கப்பலில் தீப்பற்றியதாகவும் பல பணியாளர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு விரைவில் சென்ற இந்திய கடற்படையினர், உலங்கு வானூர்தி மற்றும் படகுகளைப் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர் காயமடைந்த பணியாளர்களுக்கு கப்பலின் மருத்துவக் குழு முக்கிய மருத்துவ உதவிகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தை பாதிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.