வீட்டில் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்லும் பெற்றோரா? இந்த பதிவு உங்களுக்கே
குழந்தைகளை வீட்டிலேயே விட்டுச் செல்லும் பெற்றோர்களுக்கான பதிவு தான் இதுவாகும்.
தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது குறைந்து கொண்டே வருகின்றது. பெற்றோர்கள் பிள்ளைகள் மீது எவ்வளவு தான் அக்கறை காட்டினாலும், சில அம்பாவிதங்கள் நடந்து விடுகின்றது.
எதுவும் தெரியாமல் இருக்கும் குழந்தைகளை வீட்டிச் செல்லும் பெற்றோர்கள் சில விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அது குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும்.
குழந்தையை விட்டுச் செல்லும் பெற்றோர்களுக்கு
குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் தெரியாத நபர்களிடம் பேசுவது, அந்நிய நபர்களை வீட்டிற்குள் நுழைவதற்கு அனுமதித்தல் இதனை கட்டாயம் செய்யக்கூடாது என்பதை கற்றுக்கொடுக்கவும்.
குழந்தைகள் தனியாக இருக்கும் போது தங்களுக்கு பிடித்த உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தை தனியாக இருப்பதை தெரிந்து கொள்ளும் டெலிவரி பாய்ஸால் அசம்பாவிதம் நடைபெறலாம்.
குழந்தைகள் தனியாக வீட்டில் இருந்தால் சமையலறையை பூட்டுவதற்கு மறக்க வேண்டாம். ஏனெனில் கேஸ் ஆன் செய்து சில தவறுகளை செய்ய வாய்ப்பு உள்ளது. ஆதலால் வெளியே செல்லும் முன்பு அவர்களுக்கு தேவையான சாப்பாடு மற்றும் தண்ணீரை வைத்துச் செல்லவும்.
ஆபத்தான பொருட்களான கத்தி, வாள், இவற்றினை எட்டாத உயரத்தில் வைத்திருக்க வேண்டும். அதே போன்று மின் இணைப்புகளையும் தொடக்கூடாது என்பதை கற்றுக்கொடுப்பதுடன், வெளியே செல்லும் முன்பு எலக்ட்ரானிக் பொருட்களின் இணைப்பை அகற்றிவிட்டு செல்லவும்.
வெளியே செல்லும் முன்பு உங்களது மொபைல் எண்ணை அவர்களிடம் கொடுத்து அடிக்கடி தொடர்பு கொள்ள செய்ய வேண்டும்.
பெற்றோர்கள் வீடு திரும்பும் வரை குழந்தையை பிஸியாகவே வைத்திருக்க வேண்டும். ஏனெனில் சும்மா உட்கார்ந்திருக்கும் நேரத்தில் புதிதாக ஏதாவது செய்ய சென்றால் அது பேரழிவில் முடியவும் வாய்ப்பு உள்ளது.