நகம் வெட்டும் போது இந்த தவறை செய்தால் லட்சுமி தேவியின் அருள் நீங்குமாம்..!
நம் பெரியவர்கள் சும்மா எதுவும் சொல்வதில்லை. ஒவ்வொன்றின் பின்னும் ஒரு காரணம் இருக்கும். உதாரணமாக ஆணி அடித்தல். நகம் வெட்டுதல் என எல்லாவற்றிலும் சில நேரம் காலம் செய்யக்கூடாது என ஒரு கோட்பாடு வைத்திருப்பார்கள்.
இந்து மத நம்பிக்கைப்படி, நகம் வெட்டுதல், சவரம் செய்தல் மற்றும் முடி வெட்டுதல் ஆகியவை சுப மற்றும் அசுப விளைவுகளுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட நாட்களில் உங்கள் நகங்களையோ அல்லது முடியையோ வெட்டினால், அது உங்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மாலைக்குப் பிறகு எந்த சூழ்நிலையிலும் நகங்களை வெட்டக்கூடாது என்று கூறப்படுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகில் அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய பிறகு இரவில் நகங்களை வெட்டுகிறார்கள். ஆனால் இது தவறு.
அப்படி இரவில் நகங்களை வெட்டினால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும். இது நிதி சிக்கலை அதிகரிக்கும். வறுமையும் உங்களை வாட்டும். மாலை சூரிய அஸ்தமனத்தில் லட்சுமி வீட்டிற்குள் நுழைகிறார். இந்த நேரத்தில் குப்பை கொட்டுவது ஏற்புடையதல்ல. அது போல நகம் வெட்டுதலும் நல்லதல்ல.
லட்சுமி தேவி செல்வத்தின் சின்னமாக இருப்பதால், மாலையில் லட்சுமி வரும்போது கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்த நேரத்தில் நகங்களை மட்டுமல்ல, முடியையும் வெட்டக்கூடாது என்று கூறப்படுகிறது.
நவீன காலத்திலும் பலருக்கு மாந்திரீகம் மற்றும் மந்திரங்கள் பற்றிய பயம் உள்ளது. எனவே இரவில் நகங்களை வெட்டும்போது நகங்கள் கீழே விழுந்து காணப்படாவிட்டால் அது தொல்லைகளை ஏற்படுத்தும் என்பது பெரியோர்களின் நம்பிக்கை.
அந்த காலத்தில் மின்சாரம் இல்லை. அதனால்தான் இரவில் நகங்கள் வெட்டக்கூடாது என்றார்கள். மேலும் அதன் வெட்டிய நக துண்டுகள் கீழே விழுகின்றன. அதனை சரியாக துடைக்க முடியாது. இதனால், அந்த துகள்கள் அங்கேயே தங்கி, உணவில் புகுந்து, சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.
முன்பு சொன்னது போல் அக்காலத்தில் மின்சாரம் இல்லை. மேலும் நகங்களை வெட்டுவதற்கு இன்று போல் கருவிகள் இல்லை. கூர்மையான கத்திகளை பயன்படுத்தினால் காயம் ஏற்படும் என்பதால் இரவில் நகங்களை வெட்டக்கூடாது என்று சொல்லியிருந்தார்கள். எது எப்படியோ இரவில் நகம் வெட்டுதல் நல்லது அல்ல…