சத்து நிறைந்த நெல்லிக்காய் சட்னி… ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்.!

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இது நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. மேலும் இது வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.

இவ்வளவு மருத்துவ பண்புகள் கொண்ட பெரிய நெல்லிக்காய் கொண்டு எவ்வாறு சத்தான சட்னி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் – 2

துருவிய தேங்காய் – 1/2 கப்

பச்சை மிளகாய் – 2

வெல்லம் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க தேவையானவை :

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

காய்ந்த சிவப்பு மிளகாய் – 1

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் நெல்லிக்காயின் விதையை அகற்றி துண்டு துண்டாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நெல்லிக்காய், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், வெல்லம், மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் சேர்க்காமல் முதலில் கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி சட்னி நன்றாக கெட்டியாக இருக்கும் பதத்திற்கு அரைத்து கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

கடுகு பொரிந்ததும் காய்ந்த மிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளுங்கள்.

தற்போது தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் கொட்டி கிளறி விட்டால் நெல்லிக்காய் சட்னி ரெடி…

இந்த நெல்லிக்காய் சட்னியை இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *