உடலுக்கு பலம் சேர்க்கும் மட்டன் எலும்பு ரசம்… எப்படி செய்வது.?

வீட்டில் யாருக்கேனும் சளி, இருமல் பிரச்சனை ஏற்பட்டால் உடனே செய்து தருவது காரசாரமான ரசம் தான். கரமாக இருக்கும் அதே சமயத்தில் சத்தானதாகவும் செய்து தரவே நாம் நினைப்போம். எனவே அந்தமாதிரியான காலகட்டங்களில் நாம் மட்டன் எலும்பு ரசம் செய்து தரலாம்.

மேலும் இந்த மட்டன் எலும்பு ரசம் நமது உடலுக்கு வலுவையும் சேர்க்கும். இந்த ரசத்தை நீங்கள் சுப்பாகவும் குடிக்கலாம் அல்லது சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். எனவே வீட்டிலேயே எளிய செய்முறையில் மட்டன் எலும்பு ரசம் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

மசாலா அரைக்க தேவையானவை :

காய்ந்த சிவப்பு மிளகாய் – 2

கொத்தமல்லி விதைகள் – 1/2 டீஸ்பூன்

கருப்பு மிளகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்

மட்டன் வேகவைக்க தேவையானவை :

மட்டன் – 250 கிராம்

தண்ணீர் – 4 கப்

உப்பு – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

ரசம் செய்ய தேவையானவை :

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10

நாட்டு தக்காளி – 1

பூண்டு – 5 பல்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் குக்கரில் மட்டன் எலும்பு துண்டுகளை போட்டு அதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 30 நிமிடங்கள் அதிக தீயில் வேகவைத்து பிரஷர் அடங்கும் வரை விடவும்.

இதற்கிடையே அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து சூடானதும் காய்ந்த சிவப்பு மிளகாய், கொத்தமல்லி விதைகள், கருப்பு மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்து கு

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு மண் சட்டியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஓரளவிற்கு பொடியாக நறுக்கிய பூண்டு, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

இவை நன்கு வதங்கியவுடன் நறுக்கிய நாட்டு தக்காளி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி மென்மையாக வெந்தவுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து கிளறிவிட்டு உடனே அதில் வேகவைத்த மட்டனை தண்ணீருடன் இதில் சேர்த்து கலந்துவிட்டு கொதிக்க விடவும்.

ரசம் நன்றாக கொதித்தவுடன் அதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பை அணைக்கவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *