நாட்டையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை குற்றவாளிகளுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்..!

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகளுக்கு 9 வயது. அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே, கடந்த 2-ம் தேதி பிற்பகல் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் சிறுமி திடீரென மாயமானார். மாயமான சிறுமியை பெற்றோரும், உறவினர்களும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த சிறுமி எங்கோ நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து ரயில்நிலையம், பேருந்து நிலையம், உள்ளிட்ட இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். ஆனாலும் சிறுமி குறித்து எந்த துப்பும் துலங்கவில்லை.

இந்நிலையில், சோலை நகர் பகுதியில் அம்பேத்கர் வீதி – கண்ணதாசன் வீதி இடையே செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கு மூட்டை மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் அதனை பிரித்து பார்த்தனர். அப்போது மாயமான சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு வேட்டி துணியால் சுற்றி கால்வாயில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்து கால்வாயில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. மேலும் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டதாகவும் அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் தையல் போடப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கால்வாயில் இருந்த சிறுமியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. தண்ணீரிலேயே இருந்ததால் மிகவும் மோசமான நிலையில் இருந்தது.

சிறுமியை ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக கூறி இரு கயவர்களும் அழைத்து சென்றாக கூறப்படுகிறது. 9 வயது சிறுமி என்பதால் அவருக்கு பால் பற்கள் விழும் வயது. அப்படிப்பட்ட பால் மனம் மாறாத பச்சை குழந்தையை சீரழிக்க அந்த கயவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ் (வயசு 19) விவேகானந்தர் (வயசு 57) இரண்டு பேரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக திட்டமிட்டு இருந்தனர். அப்போது கைதிகளை தாக்குவதற்கு வழக்கறிஞர்கள் தயாராக இருந்ததால் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை நிலவியது.இதையடுத்து குற்றவாளிகள் இரண்டு பேரையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லாமல் மத்திய சிறைக்கு அளித்து சென்று அங்கேயே நீதிபதியிடம் அனுமதி வாங்கி, குற்றவாளிகள் இரண்டு பேரையும் புதுச்சேரி மத்திய சிறையில் முத்தியால்பேட்டை போலீசார் அடைத்தனர்.

மேலும் புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் கைதான விவேகானந்தன் மற்றும் கருணாஸ்க்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் காணப்பட்டதால், காலாப்பட்டு சிறை வளாகத்திற்கே சென்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *