இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்..!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர காவல்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு வடிவமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. உலக சாதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியினை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். இதில், 5 ஆயிரத்து 50 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை கொண்டு, பெண்களின் பாதுகாப்பு அம்சங்க குறித்த விழிப்புணர்வு வடிவங்களை உருவாக்கி அசத்தினர்.
இந்நிகழ்ச்சியை World Record Union அமைப்பு உலக சாதனையாக அறிவித்து, அந்த அமைப்பின் நிர்வாக அதிகாரி ஷெரிபா உலக சாதனை நிகழ்ச்சிக்கான சான்றிதழை, சந்தீப் ராய் ரத்தோரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது.” என்று கூறினார்.