நீளமான கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை கலந்து பயன்படுத்துங்கள்
மனிதர்களுக்கு இருக்கும் பெரும்பாலும் பிரச்சனைகளில் முடி பிரச்சனைகளும் ஒன்று.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை, வழுக்கை, வலுவிழந்த முடி மற்றும் நரை முடி என பல்வேறு முடி பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம்.
அடர்த்தியான மற்றும் நீளமான முடியை பெற, தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் கலந்து பயன்படுத்தி வந்தாலே போதும்.
தேவையான பொருட்கள்
தேங்கய் எண்ணெய்- ¼ லிட்டர்
விளக்கெண்ணெய்- 25 ml
எப்படி பயன்படுத்துவது?
எடுத்துவைத்துள்ள தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து வைத்துக்கொள்ளவும்.
இந்த எண்ணெய்களை குறிப்பாக கடைகளில் வாங்காமல் நாட்டு மருந்து கடைகளில் அல்லது மரச்செக்கு கடைகளில் வாங்கவும்.
இந்த கலந்து எண்ணெய்களை தொடர்ந்து கூந்தலுக்கு பயன்படுத்தி வர கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.
விளக்கெண்ணெய்யை கூந்தலுக்கு பயன்படுத்துவதால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
உடல் சூடு தணிவதால் முதி உதிர்வு, பொடுகு, வலுவிழந்த முடி போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
உச்சந்தலைக்கு எண்ணெய் வைத்து 5- 10 நிமிடம் நன்கு மசாஜ் செய்யவும். இதனை தொடர்ந்து தினமும் தலைக்கு பயன்படுத்தலாம்.