அம்பானி திருமண விழாவில் கலந்து கொள்ள எவ்வளவு பணம் வழங்கப்பட்டது தெரியுமா?

Anant Ambani – Radhika Merchant Pre – Wedding: சமீபத்தில் குஜராத்தில் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் அவர்களின் ப்ரீ வெட்டிங் விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தியாவில் உள்ள திரைய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தொடங்கி பேஸ்புக்கின் ஓனர் மார்க் ஜூகர்பர்க் வரை பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழா இந்தியாவில் உள்ள அனைவரிடமும் பேசு பொருளானது. குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமான நிலையத்திற்கு இதற்காக சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. பொதுவாக வெளியில் பார்க்க முடியாத பலரையும் இந்த திருமண விழாவில் பார்க்க முடிந்தது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களான ஷாருக் கான், சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோரை ஒரே மேடையில் ஒன்றாக பார்ப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இருப்பினும், ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழாவில் இது சாத்தியமானது. யாரும் செய்ய முடியாத இந்த விசயத்தை அம்பானி செய்து காட்டினார். பாலிவுட் நடிகர் ஆமிர் கான் பொதுவாக எந்த ஒரு திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. மிகவும் அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவில் அமீர் கான் கலந்து கொன்டு நடனம் ஆடினார். இதற்காக ​அமீர்கானின் எவ்வளவு தொகை வாங்கினார் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆனந்த்-ராதிகா திருமணத்திற்கு அமீர்கான் வாங்கிய தொகை எவ்வளவு?

பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகர்கள் பொதுவாக படத்தில் நடிக்கும் அளவிற்கு தொகையை பெறுகின்றனர். ஜாம்நகரில் நடந்த அம்பானியின் பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டு நடனம் ஆட அமீர் கான், ஷாருக்கான் ஆகியோர் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கவில்லை. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண நிகழ்ச்சியில் ஒரு பைசா கூட வாங்காமல் கலந்து கொண்டு நடனம் ஆடி உள்ளனர். “பாலிவுட் நடிகர்கள் யாரும் மேடையில் நடனம் ஆட ஒரு பைசா கூட வசூலிக்கவில்லை. அம்பானியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில், தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பணம் கேட்டால் அது எவ்வளவு அருவருப்பானது?” என்று நடிகர்களுக்கு நெருக்கிய வட்டாரம் தெரிவித்துள்ளனர்.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் கடந்த டிசம்பர் 29, 2022 அன்று ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதற்கு முன்பு இவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக டேட்டிங் செய்து இருந்தனர். பிறகு கடந்த ஆண்டு ஜனவரி 19 அன்று அம்பானிகளின் மும்பையில் உள்ள இல்லத்தில் அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் விழா பிப்ரவரி 16 அன்று ஜாம்நகரில் தொடங்கியது. இந்த ஜோடிக்கும் ஜூலை 12 அன்று மும்பையில் திருமணம் நடைபெற உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *