இந்தியாவில் முதல் முறையாக.. சிறந்த படைப்பாளர்களுக்கு விருது..!

இந்தியாவில் முதன்முதலாக தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கப்பட்டன. டெல்லியில் பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படைப்பாளிகளுக்கான விருதுகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி கௌரவித்தார்.

இந்த விருது 20 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டது. சிறந்த கதைசொல்லி, டிஸ்ரப்டர், செலபிரிட்டி கிரியேட்டர், கிரீன் சாம்பியன், சமூக மாற்றத்துக்கான சிறந்த படைப்பாளி, மிகச் சிறந்த விவசாய படைப்பாளி, கல்சுரல் அம்பாசிடர், சிறந்த டிராவல் கிரியேட்டர், ஸ்வச்சா அம்பாசிடர், நியூ இந்தியா சாம்பியன், டெக் கிரியேட்டர், ஹெரிடேஜ் பேஷன், சிறந்த கிரியேட்டிவ் கிரியேட்டர், சிறந்த உணவு படைப்பாளி,

சிறந்த கல்வி படைப்பாளி, சர்வதேச கிரியேட்டர் ஆகியவை இந்த பிரிவுகளாகும்.

இது பற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கதைசொல்லி, சமூக மாற்றத்தை வலியுறுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கல்வி மற்றும் கேமிங் உள்ளிட்ட களங்களில் சிறந்த தாக்கத்தை அங்கீகரிக்கும் முயற்சியாக இந்த விருது வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில், ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஜெய கிஷோரி, அமெரிக்க யூடியூபர் ட்ரூ ஹிக்ஸ், பலர் உட்பட பல சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். விருதுபெற்றோர் விவரம்:

1. ஜெய கிஷோரிக்கு சமூக மாற்றத்துக்கான சிறந்த படைப்பாளி விருது வழங்கப்பட்டது. இவர் ஒரு சிறந்த ஆன்மிகம் மற்றும் சுயமுன்னேற்ற ஊக்குவிப்பு பேச்சாளர் ஆவார்.

2. உணவுப் பிரிவில் சிறந்த படைப்பாளிக்கான விருது கபிதா சிங்குக்கு (கபிதாஸ் கிச்சன்) வழங்கப்பட்டது. கபிதாஸ் கிச்சன் என்ற மிகப் பிரபலமான யூடியூப் சமையல் சேனலை கபிதா சிங் நடத்தி வருகிறார். சமையலில் ஆர்வம், இந்திய சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர். கபிதாவுக்கு சமூக தளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

3. சிறந்த சர்வதேச படைப்பாளிக்கான விருது ட்ரூ ஹிக்ஸ்க்கு வழங்கப்பட்டது. ஆண்ட்ரூ ஹிக்ஸ், இந்தி மற்றும் போஜ்புரி மொழியில் திறமை வாய்ந்தவர். இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்புக்கான குறுகிய வீடியோக்களை உருவாக்குகிறார். அவை விரைவாக வைரலாகின்றன. ஆண்ட்ரூ ஹிக்ஸ், அவரது தனித்துவமான உச்சரிப்புக்காக அறியப்பட்டவர். சமூக ஊடகங்களில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 9 லட்சம் பாலோயர்களை கொண்டுள்ளார். அவரது வீடியோக்கள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெறுகின்றன.

4. காமியா ஜானிக்கு சிறந்த டிராவல் படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. கர்லி டேல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் காமியா ஜானி. பிரபல ஃபுட் பிளாக்கர்.

5. ரன்வீர் அல்லாபாடியாவுக்கு (பீர் பைசெப்ஸ்) இந்த ஆண்டின் டிஸ்ரப்டர் விருது வழங்கப்பட்டது. ரன்வீர் அல்லாபாடியா ஒரு பிரபல பாட்காஸ்டர். ஒரு காலத்தில் சராசரி பொறியியல் மாணவராக இருந்த அவர், இப்போது பீர்பைசெப்ஸின் இதயமாகவும் ஆன்மாவாகவும் இருக்கிறார். ஏழு யூடியூப் சேனல்களில் 12 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை கவர்ந்துள்ளார்.

6. ஆர்ஜே ரவுனாக்குக்கு சிறந்த படைப்பாளி- ஆண் விருது வழங்கப்பட்டது. ரவுனக் பிரபல இந்திய ரேடியோ ஜாக்கி ஆவார். இவரது நகைச்சுவை கலந்த பேச்சு லட்சக்கணக்கான நேயர்களை கவர்ந்துள்ளது.

7. ஷ்ரத்தா ஜெயினுக்கு மிகவும் ஆக்கப்பூர்வமான படைப்பாளி (பெண்) விருது வழங்கப்பட்டது. ஐயோ ஷ்ரத்தா எனச் செல்லமாக அழைக்கப்படும் ஷ்ரத்தா ஜெயின் ஒரு காமடி நடிகை, ரேடியோ ஜாக்கி, தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். முக்கியமாக கன்னடத் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்.

8. அரிதாமனுக்கு சிறந்த மைக்ரோ கிரியேட்டர் விருது வழங்கப்பட்டது. இவர் தில்லியைச் சேர்ந்த யூடியூபர், லைவ் ஸ்ட்ரீமர், கேமர் ஆவார். வேத வானியல் மற்றும் பண்டைய இந்திய ஞானத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

9. கேமிங் பிரிவில் சிறந்த படைப்பாளிக்கான விருது நிஷ்சய்க்கு வழங்கப்பட்டது. யூடியூப்பில் 23 லட்சம் பாலோயர்களை வைத்துள்ளார். இன்டல் நிறுவன அம்பாசிடராக உள்ளார்.

10. அங்கித் பையன்பூரியாவுக்கு சிறந்த உடல்நலம் மற்றும் உடற்தகுதி படைப்பாளர் விருது வழங்கப்பட்டது. சோனிபட்டின் பயான்பூரைச் சேர்ந்த முன்னாள் இந்திய மல்யுத்த வீரர் அங்கித் பையன்பூரியா, பாரம்பரிய மற்றும் உள்நாட்டு பயிற்சி நுட்பங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஒரு உடற்பயிற்சி செல்வாக்குமிக்கவராக அங்கீகாரம் பெற்றுள்ளார். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனநலத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் அவரது விதிவிலக்கான உடற்பயிற்சி முறைகளுக்காக அவர் பிரபலமானார்.

11. நமன் தேஷ்முக்குக்கு கல்வி பிரிவில் சிறந்த படைப்பாளிக்கான விருது வழங்கப்பட்டது. நமன் தேஷ்முக்கின் தொழில்நுட்பப் பயணம் 2017 இல் அவர் கம்ப்யூட்டர் சயின்ஸை படிக்கும் போது தொடங்கியது. சிக்கலான தலைப்புகளை எளிமையான, புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் யூடியூப் வீடியோக்களை உருவாக்குகிறார். இந்தத் திறன் அவரை மற்றவர்களில் இருந்து வேறுபடுத்துகிறது.

12. ஜான்வி சிங்குக்கு ஹெரிடேஜ் ஃபேஷன் ஐகான் விருது வழங்கப்பட்டது. ஜான்வி சிங் ஒரு ஆன்மிக, கலாசார படைப்பாளி. யோகா பயற்சியாளராகவும் உள்ளார். பகவத் கீதை, உபநிஷதங்கள் விரிவுரையாளர்.

13. மல்ஹர் கலம்பே ஸ்வச்சத் தூதுவர் விருதை பெற்றார். 2017 ஆம் ஆண்டு முதல் வாராந்திர தூய்மைப்படுத்தும் இயக்கங்களில் முன்னணியில் இருக்கும் கலம்பே, பிளாஸ்டிக் மாசு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார். அவர் பீச் ப்ளீஸ் என்ற சுற்றுச்சூழல் குழுவை நிறுவியுள்ளார். அவரது சமூக ஊடக பதிவுகளில் பார்ட்னர்களை ஒன்றிணைக்கிறார்.

14. தொழில்நுட்ப பிரிவில் சிறந்த படைப்பாளிக்கான விருதை கௌரவ் சவுத்ரி பெற்றார். அவர் முதன்மையாக பிராண்ட் ஒப்பந்தங்கள் மற்றும் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கிறார். துபாய் காவல்துறை மற்றும் பிற அமைப்புகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை சப்ளை செய்கிறார். துபாய் காவல்துறையின் சான்றிதழைப் பெற்ற பாதுகாப்பு அமைப்புகள் பொறியாளர்.

15. மைதிலி தாக்குருக்கு ஆண்டின் சிறந்த கலாசார தூதுவர் விருது வழங்கப்பட்டது. மைதிலி தாக்குர் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டுப்புற இசையில் பயிற்சி பெற்ற ஒரு இந்திய பின்னணி பாடகி ஆவார். அவர் இந்தி, பெங்காலி, மைதிலி, உருது, மராத்தி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் அசல் பாடல்கள் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற இசையை முக்கியமாகப் பாடியுள்ளார்.

16. பங்க்தி பாண்டேவுக்கு பிடித்த பசுமை சாம்பியன் விருது வழங்கப்பட்டது. இன்ஸ்டாகிராமில் 255K பாலோயர்கள் கொண்ட பங்க்தி பாண்டே அகமதாபாத்தைச் சேர்ந்தவர். பூஜ்ஜிய கழிவு பயிற்சியாளர் மற்றும் ஸ்லோ பேஷன் வக்கீல். பெரும்பாலும் தனது சொந்த அனுபவத்தின் மூலம் கன்டன்ட்களை உருவாக்குகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலர்.

17. சிறந்த கதைசொல்லிக்கான விருது கீர்த்திகா கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்டது.

18. அமன் குப்தாவுக்கு செலிபிரிட்டி கிரியேட்டர் விருது வழங்கப்பட்டது. BoAT நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி அமன் குப்தா. போட் நிறுவனம் ஆடியோ டெக்னாலஜி ஹெட்வேர்களில் நிபுணத்துவம் பெற்ற இந்திய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிராண்ட் ஆகும்.

20 வெவ்வேறு பிரிவுகளில் 1.5 லட்சத்துக்கும் அதிகமான பரிந்துரைகள் பெறப்பட்ட பின்னர் மூன்று சர்வதேச படைப்பாளிகள் உட்பட வெற்றியாளர்கள் முடிவு செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து, வாக்குச் சுற்றில், பல்வேறு விருதுப் பிரிவுகளில் டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு சுமார் 10 லட்சம் வாக்குகள் பதிவாகின.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *