100வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு ஏமாற்றம்.. இதை காரணம் காட்டி அணியிலிருந்து நீக்கிடுவாங்களோ?
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வலுவான நிலையில் இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 218 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் அரை சதமும் ரோகித் சர்மா,கில் சதமும் அடித்த நிலையில் சப்ராஸ்கான் மற்றும் அறிமுகப் போட்டிகள் களமிறங்கிய படிக்கல் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.
இந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்தது. இது இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 255 ரன்கள் கூடுதல் ஆகும். இந்த நிலையில் 100வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் அஸ்வின் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
எனினும் அஸ்வின் ஒரு ஆல்ரவுண்டர் இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து சதம் அடித்திருக்கிறார். 339 ரன்கள் குவித்திருக்கிறார்.இதனால் நூறாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் அரை சதம் அடித்து சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால் அஸ்வின் கொஞ்ச நேரம் நின்று ரன்கள் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அஸ்வின் ஐந்து பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு டாம் ஹார்ட்லி ஓவர் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் டக் அவுட் ஆகி இருக்கிறார். இதற்கு முன்பு இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கார், ஆஸ்திரேலியா வீரர் ஆலன் பார்டர், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ட்னி வால்ஸ், ஆஸ்திரேலிய வீரர் மார்க் டைலர், நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளமிங் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக், நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்குல்லம் ஆகியோர் தங்களுடைய நூறாவது டெஸ்டில் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் அஸ்வின் கடைசியாக பேட்டிங்கில் அரைசதம் அடித்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் தான் அஸ்வின் அரை சதம் கடந்தார். அதன் பிறகு அவர் ஒரு முறை கூட 40 ரன்கள் தொட வில்லை. ஏற்கனவே வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அஸ்வின் தற்போது பேட்டிங்கில் தடுமாறினால் இதையே காரணம் காட்டி வெளிநாடுகளில் அவரை களம் இறக்காமல் அணியை விட்டு நீக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் அஸ்வின் பேட்டிங்கில் ரன் சேர்த்து நடப்பாண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பிளேயிங் லெவனனில் இடம்பெற முயற்சிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.