மாதவிடாய் வலியை ஆண்களுக்கு பரிசளித்த நிறுவனம்.., அவர்களது அனுபவம் எப்படி இருந்தது?
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் மாதாந்திர வலியை சக ஆண்கள் உணர்வதற்கான அறிவியல் சாதனங்களின் உதவியோடு கடத்தி ஜப்பான் நிறுவனம் ஒன்று வரவேற்பை பெற்றுள்ளது.
மார்ச் 08 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு ஆண்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜப்பான் நிறுவனம் ஒன்று பெண்களின் மாதாந்திர வலியை சக ஆண்கள் உணர்வதற்காக புதுவித முயற்சியை முன்னெடுத்துள்ளது.
எங்கு நடந்தது?
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டோக்கியோவின் எக்ஸியோ என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், ஆண் பணியாளர்களுக்கு செயற்கை மாதவிடாய் வலி பரிசாக வழங்கியது.
அதாவது, ‘பெரியோனாய்டு’ என்ற எலெக்ட்ரானிக் சாதனம் மூலம், ஆணின் வயிற்றில் மின் சமிக்ஞைகளை அனுப்பி,மாதவிடாய் வலியை உணர செய்தது. அவர்கள் Virtual reality -யில் வலியை உணர்ந்தனர்.
நாரா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், ஒசாகாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த வலியை உருவாக்கும் சாதனத்தை தயாரித்துள்ளது.
அனுபவம்
இந்த மாதவிடாய் வலியை உணர்ந்த ஆண்கள் தங்களால் நகர முடியவில்லை என்றும் நிற்க முடியவில்லை என்றும் துடிதுடித்துப்போனேன் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இன்னும் சிலர், இந்த வலியோடு பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பணி புரிகிறார்கள். அவர்கள் மீது மரியாதை வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.