கர்ப்பிணியாக இருந்தும் துஷ்பிரயோகத்தை எதிர்கொண்டேன்! மனம் திறந்த மேகன் மார்க்கல்

தான் கர்ப்பமாக இருந்த போது “வெறுக்கத்தக்க” மற்றும் கொடூரமான துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக இளவரசர் ஹரியின் மனைவி மேகன் தெரிவித்துள்ளார்.

கர்ப்ப காலத்தில் மேகன் சந்தித்த துன்பங்கள்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மற்றும் சசெக்ஸின் டச்சஸ் ஆன மேகன் தான் கர்ப்பமாக இருந்த இரண்டு நேரங்களிலும் சமூக ஊடகங்களில் இருந்து வெறுப்பு துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அது மிகவும் கொடூரமானது என்றும் மேகன் மார்க்கல் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தின கூட்டம்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெக்சாஸின் SXSW Conference-ல் கலந்து கொண்ட மேகனிடம், முடிவில்லாத ஆன்லைன் நச்சுத் தன்மையை எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த மேகன் மார்க்கல், என்னுடைய நலத்திற்காக முடிந்தவரை சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்தேன்.

ஆனாலும், Archie மற்றும் Lilibet இருவரின் கர்ப்ப காலத்தில் மிகப்பெரிய கொடுமைப்படுத்துதல் மற்றும் துஷ்பிரயோகங்களை அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.

மே 2019ம் ஆண்டு இளவரசர் ஆர்ச்சி பிறந்தார், தம்பதிகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறிய பிறகு இளவரசி லிலிபெட் ஜூன் 2021 ல் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *