சிஎஸ்கே 14 கோடி ரூபாய்க்கு எடுத்த வீரர்.. வங்கதேசத்துக்கு எதிரான டி20 யில் டெஸ்ட் இன்னிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி நடந்து முடிந்த ஏலத்தில் 14 கோடி ரூபாய் கொடுத்து நியூசிலாந்து வீரர் டாரல் மிட்செலை வாங்கியது.இதன் மூலம் பென் ஸ்டோக்ஸ்க்கு மாற்று வீரராக டாரல் மிட்செல் விளங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இதற்கு காரணம் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் அதிரடியாக ஆடிய டாரல் மிட்செல், இரண்டு சதம் என அந்த தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடி 500 ரன்கள் குவித்தார். இதனால் டாரல் மிட்செல் மீது நல்ல எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இதனால் சிஎஸ்கே அணியின் நடுவரிசை பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பினர். இதனால்தான் டாரல் மிட்செலை போட்டி போட்டு 14 கோடி ரூபாய் வரை கொடுத்து சிஎஸ்கே அணி எடுத்தது. இந்த நிலையில் இந்த ஏலம் முடிந்த உடனே டாரல் மிட்செல் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாரல் மிட்செல் வெறும் 15 பந்துகளை எதிர் கொண்டு 14 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதனை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது .இதில் டாரல் மிட்செல் எப்படி விளையாட போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியில் பின் ஆலன் இரண்டு ரன்களில் ஆட்டம் இழக்க இரண்டாவது ஓவரில் மிட்செல் ஜோடி சேர்ந்து விளையாடினார். அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து டிம் செபர்ட் பெவிலிய திரும்பினார். இதில் ஆறு பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். ஆனால் 14 கோடி ரூபாய் கொடுத்து எடுக்கப்பட்ட டாரல் மிட்செல் 24 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 18 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். நியூசிலாந்த அணி 11 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. டாரல் மிட்செல் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அவர் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் சொதப்புவது சிஎஸ்கே ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது
.டாரல் மிட்செல் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார் என்றும் இவர் சிஎஸ்கேக்கு வந்தால் என்ன ஆகும் என்றும் ரசிகர்கள் தற்போது புலம்பி வருகின்றனர்.எனினும் ஒரு தொடரை வைத்து டாரல் மிட்சலை எடை போடுவது தவறு என்றும் அவர் தோனியின் நம்பிக்கையை காப்பாற்றுவார் என்றும் சில ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.