நடிகை மாளவிகா மோகனன் போட்டோவுடன் அஞ்சல் தலை.. அதுவும் எந்த நாட்டில் பாருங்க
நடிகை மாளவிகா மோகனின் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதில் சின்ன ரோல் தான் என்றாலும் அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.
அதன் பின் தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடிப்பில் தங்கலான் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஸ்டாம்ப்
இந்நிலையில் மாளவிகா தற்போது பூட்டான் நாட்டுக்கு சென்று இருக்கிறார். அங்கு இருக்கும் போஸ்ட் ஆபிசில் மக்கள் அவர்களுக்கு தேவையான போட்டோவை கொடுத்து அதை ஸ்டாம்ப் ஆக மாற்றிக்கொள்ளலாம்.
தனது தங்கலான் பட போட்டோவை கொடுத்து ஸ்டாம்ப் செய்திருக்கிறார் மாளவிகா மோகனன். அதை நெகிழ்ச்சியாக மாளவிகா இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.