நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறீங்களா? இந்த பரிகாரத்தைச் செய்தால் போதும்
பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாளாக பார்க்கப்படுகின்றது. இந்த நாளானது செல்வத்தின் தெய்வமான லட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் ஆசீர்வாதத்தை பெறும் நாளாகவும் பார்க்கப்படுகின்றது. சில பரிகாரங்களை மேற்கொண்டால் லட்சுமி தேவியின் அருளை பெறலாம். பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
பரிகாரங்கள் என்ன?
மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற கடையிலிருந்து தாமரை மலரில் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து, பூக்கள் போட்டு, தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
வெள்ளிக்கிழமையில் லட்சுமி தேவியின் முன்பு ஒரு ரூபாய் நாணத்தை வைத்து, நன்கு வணங்கிவிட்டு, நாள் முழுவதும் அந்த நாணத்தை தேவி முன்பு வைத்து, பின்பு சிவப்பு துணியில் நாணயத்தை கட்டி வைத்தால் மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் அதிகரிக்கும்.
ஆரோக்கியம் பெற வேண்டும் என்றால் லட்சுமி கோவிலில் சங்கு அர்ச்சனை செய்து, பின்பு அம்மனுக்கு நெய் மற்றும் பிரசாதம் வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
செல்வம் பெருக வேண்டுமெனில், ஒரு சிறிய மண் பானையை எடுத்து அதில் சாதத்தினை போடவும். அரிசியின் மேல் ஒரு ரூபாய் நாணயம் மற்றும் மஞ்சள் வைக்கவும். இப்போது அதை மூடி, லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெற்ற பின்பு கேரவில் பூசாரிக்கு அரிசியை தானமாக கொடுத்துவிட வேண்டும்.
வேலையில் வெற்றி கிடைக்க வேண்டுமெனில், வீட்டை விட்டு வெளியேறும் போது, லட்சுமி தேவியை வணங்கிவிட்டு ஆசீர்வாதத்தினை பெற வேண்டும். பின்பு தயிர் மற்றும் சர்க்கரை சாப்பிட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினால் செல்லும் வேலை வெற்றி நிச்சயமாகும்.
வியாபாரத்தில் நிதி ஆதாயம் கிடைக்க வேண்டும் என்றால், குளித்த பின்பு சுத்தமான ஆடைகளை அணிந்து ஆசனத்தில் அமர்ந்து லட்சுமி தேவியின் மந்திரத்தை குறைந்தது 11 முறை சொல்ல வேண்டும்.
பணப்பெட்டி நிரம்பி வழிய வேண்டுமெனில், குளித்து சுத்தமாகிய பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது மஞ்சளை எடுத்து, தண்ணீர் கலந்து பேஸஜட் போன்று செய்யவும். பின்பு வீட்டின் பிரதான வாயின் இருபுறமும் மஞ்சளைக் கொண்டு தரைவில் சிறு காதல்தடத்தினை உருவாக்கவும். பின்பு வாயின் இருபுறமும் உள்ள சுவரில் ஸ்வஸ்திகா அடையாளத்தை வைத்து லட்சுமி தேவியை வழிபடவும்.