கோவை மக்கள் குஷி.. 5 வருடத்திற்கு பின்பு ‘முக்கிய’ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

தமிழ்நாட்டிலேயே வேகமாக வளரும் மாவட்டமாகத் திகழும் கோயம்புத்தூர் மோட்டார், டெக்ஸ்டைல், இன்ஜினியரிங் பொருட்கள் தயாரிப்புகளில் முன்னோடியாக இருப்பது போலவே தங்க நகை தயாரிப்பு, விற்பனை, விநியோகம், ஏற்றுமதியில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் கோவையில் தங்க நகைத் தொழிலாளிகளுக்கான க்ளஸ்டர் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசிடம் இருந்து 5 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு ஒப்புதல் கிடைத்ததுள்ளது. தொழிற்துறை க்ளஸ்டர் என்பது ஒரு குறிப்பிட்ட துறைக்கான பொது இடம், இதை வர்த்தகத்திற்காக அனைத்து தொழிலாளர்களும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

சுமார் 15.30 கோடி மதிப்பிலான தங்க நகைத் தொழிலாளிகளுக்கான க்ளஸ்டர் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒரு வாரத்திற்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கோவை தங்க நகைக்கடை பேரவையின் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எம்.கமலஹாசன் வியாழக்கிழமை தெரிவித்தார். கோயம்புத்தூரில் அமைக்கப்படும் இந்தப் பொதுப் பயன்பாட்டுக்கான கிளஸ்டரில் ரத்தினம் மற்றும் ஆபரணத் துறைக்குச் சுமார் 20 விதமான சேவைகளை வழங்கவுள்ளதாகக் கமலஹாசன் கூறினார்.

இந்த Coimbatore Goldsmith Council 2018 ஆம் ஆண்டு 60 உறுப்பினர்கள் கொண்ட அமைப்புச் சொந்தமாக நிலத்தை வாங்கி 2 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடத்தைக் கட்டமைத்து உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள 15.30 கோடி ரூபாய் திட்டத்திற்கு மாநில அரசு கட்டுமான செலவுகளுக்கு மானியமாக 10 சதவீத தொகை அளிக்க உள்ளது. மத்திய அரசு அளிக்கும் மீதமுள்ள தொகையை இயந்திரங்களை வாங்கப் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் ஒப்புதல் தேவைப்படும் காரணத்தால் தாமதமாகியுள்ளது. மேலும் ஜனவரி மாதம் சென்னையில் நடக்க உள்ள குளோபல் இன்வெஸ்டார் கூட்டத்தில் 70 கோடி ரூபாய் முதலீடு செய்யும் திட்டத்திற்காக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை Coimbatore Goldsmith Council கையெழுத்திட உள்ளது. இந்த முதலீட்டு மூலம் கோயம்புத்தூரில் உள்ள 6000 தங்க நகை உற்பத்தி நிறுவனங்கள், 50000 தங்க நகை பணியாளர்கள் பலன் அடைய உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *