செவ்வாழை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சாதாரண வாழைப்பழத்தைப் போல செவ்வாழைப்பழமும் அனைராலும் விரும்பி சாப்பிடப்படுகின்றது.

வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அளப்பரிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.

மேலும் செவ்வாழைப்பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இதனால் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

அந்தவகையில், இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

எந்த நேரத்தில் சாப்பிடனும்
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணிக்கு அல்லது மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் அதன் நன்மைகள் நமக்குக் கிடைக்காது.

மஞ்சள் வாழைப்பழத்தை விட சிவப்பு வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்துள்ளது.நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவில் சாப்பாட்டுக்கு பின்னர் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

48 நாட்களுக்கு தொடர்ச்சியாக செவ்வாழை சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுவடையும் ஆண்மை குறைப்பாடு சீராகும்.

கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாக இருக்கும். குறிப்பாக மாலைக்கண் நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பல் வலி, பல்லசைவு, போன்ற பல் சார்ந்த பிரச்சினை உள்ளவர்களக்கு செவ்வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டுவது சிறந்த தீர்வு கொடுக்கும்.

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற துணைப்புரியும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *