வீடே மணமணக்கும் சுவையான அன்னாசி பாதாம் அல்வா செய்வது எப்படி ? ரெசிபி இதோ
இனிப்பு பண்டம் என்றால் சுவையும் மணமும் கட்டாயம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பார்கள்.
அல்வா என்றால் நாவில் வைத்தவுடன் கரைய வேண்டும். அந்த அளவிற்கு சுவை பிரமாதமாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இன்று சுவையான அனானசி பாதாம் அல்வா எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அன்னாசிப்பழம் – 250 கிராம்
பாதாம் – 250 கிராம்
முந்திரி – 15 கிராம்
பால்கோவா – 150 கிராம்
சர்க்கரை – 125 கிராம்
நெய் – 150 கிராம்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
செய்யும் முறை
முதலில் அன்னாசி பழத்தின் தோலை சீவி அதை நன்றாக சுத்தமாக்கியதும் அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சம் நெய் ஊற்றி அது சூடாகியதும் வெட்டிய அன்னாசி துண்டுகளை சேர்த்து ஈரம் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
இன்னுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி பாதாம் பருப்பை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இதை 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விடலாம். இதன் பிறகு பாதாம் பருப்பை இறக்கி அதிலுள்ள தோலை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதை ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் அரைத்த பாதாமை வதக்கி அன்னாசி பழத்துடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின்னர் இதனுடன் தேவையான அளவு சக்கரை மற்றும் பால்கோவா சேர்த்து அடிப்பிடிக்காமல் கிண்டி விட்டுகொண்டே இருக்க வேண்டும்.
இது நன்கு அல்வா பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கலந்து விட வேண்டும். இதற்கு பின்னர் பாதாமை நறுக்கி மேலால் போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.