500 ஆண்டுக்கு பிறகு உருவாகும் அபூர்வ ராஜயோகம், இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், திடீர் பண லாபம்
நமது இந்து மதத்தில் ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் பெயர்ச்சி, அஸ்தமனம், உதயம் போன்றவை சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த ராஜயோகம் உருவாவதால் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இதனுடன், பல ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இத்தகைய அரிய சேர்க்கைகளை உருவாக்கும் சில கிரகங்களும் உள்ளன. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் இந்த அபூர்வ கேதார ராஜயோகம் உருவாகயுள்ளது. பொதுவாக ஏழு கிரகங்கள் நான்கு ராசிகளில் பெயர்ச்சி அடையும் போது கேதார ராஜயோகம் உருவாகும். இந்த கேதார ராஜயோகம் மிகவும் அரிதான யோகமாகும். எனவே, இந்த யோகத்தின் பலன் அனைத்து ராசிகளின் மீதும் தென்படும். ஆனால் இந்த நேரத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்த ராஜயோகத்தால் திடீர் பண லாபம், பதவி உயர்வு மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
மிதுனம் (Gemini Zodiac Sign): தற்போது உருவாகயுள்ள கேதார ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லபலனைத் தரும். ஏனெனில் மிதுன ராசிக்கு பன்னிரெண்டாம், ஒன்பதாம் மற்றும் 11 ஆம் வீட்டில் இந்த கேதார ராஜயோகம் உருவாக்கப் போகிறது. எனவே இந்த ராஜயோகத்தின் மூலம், மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். மேலும், வருமானம் அதிகரிக்கும். இது தவிர வீட்டில் சமய அல்லது சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணத்தை மீட்க முடியும். ஆசைகள் நிறைவேறும்.
தனுசு (Sagittarius Zodiac Sign): தனுசு ராசிக்காரர்களுக்கு கேதார ராஜயோகத்தால் சுப பலன் கிடைக்கும். இந்த ராஜயோகம் உருவாகயுள்ளதால், தனுசு ராசிக்காரர்களுக்கு மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். இதனுடன் அரசியலில் தொடர்புடையவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கலாம். வாகனம் அல்லது சொத்து மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத விதத்தில் நிதி ஆதாயமும் உண்டாகும். அயல்நாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு நற்பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புதிய வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
மகரம் (Capricorn Zodiac Sign): கேதார ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். இந்த யோகம் அமைவதால் ஐந்தாம், ஆறாம் வீட்டில் செல்வம், மகிழ்ச்சி பெருகும். எதிர்பாராத நிதி ஆதாயமும் பெறலாம். குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். திருமண யோகம் உண்டாகலாம். நினைவுத்திறன் அதிகரிப்பதால், மாணவர்கள் நன்கு படிப்பர். பதவியின்றி இருக்கும் கட்சித்தொண்டர்களுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். குடும்பத்தில் திருமண சுபகாரியமும் உற்சாகமும் கூடும். கல்விப் போட்டியில் வெற்றி பெறுவீர்கள்.