வேலையில், தொழிலில் வெற்றிகளை குவிக்க வேண்டுமா… சில எளிய பரிகாரங்கள்
உத்தியோகஸ்தர்கள் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, அனைவருமே தாங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும், வேலையில் தொழிலில் சாதனைகளை புரிய வேண்டும் என்று தான் நினைப்பார்கள். ஆனால் சில சமயங்களில், கடின முயற்சி, பல்வேறு உத்திகளை கடைபிடித்தல் என அனைத்தும் தேவையான பலன்களை தராமல் நம்மை வருத்தத்தில் ஆழ்த்தும். இந்நிலையில், வேலையில் தொழிலில் வெற்றி பெற, கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை பற்றி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும், திறத்தன்மை இருக்கவும், வேலையில் தொழிலில் வெற்றி பெறுவது அவசியம், கடின உழைப்பிற்கு ஏற்றனர் பெற, தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி பெற ஜோதிட சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது.
காக்கைக்கு உணவளித்தல்
கருமத்திற்கு ஏற்ப பலனை அளிக்கும் சனி பகவானின் வாகனமாக காகம் கருதப்படுகிறது. அதே நேரத்தில் நம் முன்னோர்களின் வடிவமாகவும் காணும் வழக்கம் இந்து மதத்தில் உள்ளது. வேலையில் தொழிலில் வெற்றி பெற, தினசரி காகங்களுக்கு சாதம் படைத்த பின், உண்பது மிக அவசியம். காகத்திற்கு உணவளிப்பதன் மூலம், முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, கர்ம காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனமகிழ்ந்து, வேலையில் தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், நவகிரக வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வதும் பலன் அளிக்கும்.
விநாயகர் வழிபாடு
விக்னங்களை தீர்க்கும் விநாயகர், உங்கள் வேலையிலும் தொழிலும் வெற்றி கிடைக்க உதவுவார். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி, விநாயகர் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபடுவதும், விநாயகர் கோவிலுக்கு தினமும் செல்வதும் உங்களுக்கு சிறந்த பலனை கொண்டு வந்து சேர்க்கும். கடின உழைப்பிற்கான நற்பயன்கள் கிடைக்கும். முடிந்தவர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து, வழிபட பலன் கை மேல் கிடைக்கும்.
குலதெய்வ வழிபாடு
வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டாலே, பலவிதமான நன்மைகள் வந்து சேரும். குலதெய்வ வழிபாடு குறித்த முக்கியத்துவம், இந்து மதத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில், உங்களால் முடிந்த அளவு தொகையை, குலதெய்வம் பெயரில் எடுத்து வைத்து, நீங்கள் கோவிலுக்கு போகும்போது அந்த எடுத்துச் சென்று, அன்னதானம் செய்வது, தோஷங்கள் அனைத்தும் விலக உதவும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
சூரிய பகவானை வழிபடுதல்
சூரிய பகவானை வழிபடுவதன் மூலம், நீங்கள் வேலை தொழிலில் வெற்றியைப் பெறலாம். முடிந்தால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது, உடல் மன ஆரோக்கியம் இரண்டிற்குமே நல்லது. தினமும் காலை குளித்துவிட்டு, ஓம் ஹ்ரீம் சூர்யாய நமஹ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து அர்க்கியம் சமர்ப்பித்து வழிபட்டால், தடைகள் அனைத்தும் நீங்கி, வேலையில் தொழில் வெற்றிகளை குவிக்கலாம். சூரியனின் கதிர்கள் நம் உடலை சுத்தப்படுத்தி, மனதிற்கு ஆற்றலையும் புத்துணர்ச்சியையும் தந்து, செயல் திறனை அதிகரிக்கிறது.