வெயிட்டை குறைத்து சிக்குனு ஆகணுமா? இந்த ஆரஞ்சு தோல் டீ குடிங்க

ஆரஞ்சு பழத்தில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது பல உடல்நலப் பிரச்சனைகளில் நமக்கு நன்மை தருகிறது. ஆரஞ்சுப் பழத்தைப் போலவே, அதன் தோலிலும் பல சத்துக்கள் நிரம்பியுள்ளது. அதன்படி இந்த தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இது தவிர, இதில் வைட்டமின் சி உள்ளதால், இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்நிலையில் நீங்கள் உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தால், ஆரஞ்சு தோல் தேநீர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த டீயில் உள்ள அத்தியாவசிய கூறுகள் விரைவான உடல் எடையை குறைக்க உதவும்.

உடல் எடை குறைக்க ஆரஞ்சு தோல் தேநீர் எவ்வாறு உதவும் :

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் – Boost Metabolism
உடல் எடை குறைக்க வலுவான வளர்சிதை மாற்றம் இருக்க வேண்டியது அவசியமாகும். ஆரஞ்சு தோல் தேநீர் உடல் எடையை குறைக்க உதவும். ஏனெனில் இதில் சினெஃப்ரின் கலவை காணப்படுகிறது, இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் கலோரியை குறைக்கவும், கொழுப்பை எரிக்கவும் உதவும்.

நார்ச்சத்து நிறைந்துள்ளது – High Fiber Content
ஆரஞ்சு தோலில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. எனவே இதன் டீ குடித்து வந்தால் பசி கட்டுப்படுத்த உதவும். மேலும் இந்த தேநீரை குடிப்பதன் மூலம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பி இருக்கும். அதுமட்டுமின்றி ஆரஞ்சு தோல் தேநீர் ஸ்வீட் ஆசையை கட்டுபடுத்த உதவும்.

நீர் எடையை குறைக்க உதவும் – Reduce Water Weight
ஆரஞ்சு தோல் தேநீர் உடலில் இருக்கும் கூடுதல் நீரை வெளியேற்ற உதவும். வீக்கத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது. இதில் உள்ள கூறுகள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற பெரிய அளவில் உதவும்.

ஆரஞ்சு தோல் தேநீர் தயாரிப்பது எப்படி – How To Make Orange Peel Tea
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு தோல்கள் – 4-5
இலவங்கப்பட்டை – ஒரு சிட்டிகை
தேன் – அரை தேக்கரண்டி
கிராம்பு – 2
ஏலக்காய் – 1

செயல்முறை:
முதலில் ஆரஞ்சு தோலை நன்றாக உலர்த்தி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை சூடாக்கவும்.
அதில் ஆரஞ்சு பழத்தோலை சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
தண்ணீர் பாதியானதும் ​​கேஸை ஆஃப் செய்து தேநீரை வடிகட்டவும்.
பின்னர் அதில் தேன் சேர்த்து ஆரஞ்சு தோல் தேநீரை பருகவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *