கருத்துக்கணிப்புகளில் முந்திய ட்ரம்புக்கு இன்னொரு பேரிடி… தடை விதித்த இரண்டாவது மாகாணம்
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து கொலராடோ உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்த சில நாட்களுக்குப் பிறகு மைனே மாகாணம் டொனால்ட் ட்ரம்பை 2024 தேர்தல் களமிறங்க தடை விதித்துள்ளது.
தற்போது மைனே மாகாணமும் கொலராடோ மாகாணம் முன்னெடுத்துள்ள அதே நடவடிக்கையை தற்போது மைனே மாகாணமும் பின்பற்றியுள்ளது டொனால்டு ட்ரம்புக்கு இன்னொரு சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.
ஜனவரி 6, 2021ல் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் அரசியலமைப்பை மீறினாரா என்பது குறித்து மாகாணங்கள் கடும் விவாதத்தில் ஏற்பட்டுள்ளன.
வியாழனன்று மைனே மாகாண ஜனநாயகக் கட்சியின் மாகாணச் செயலாளர் ஷென்னா பெல்லோஸ் இந்த முடிவை எடுத்தார். இதனையடுத்து மைனே மாகாணத்தில் இருந்து ட்ரம்ப் ஆதரவாக மக்கள் வாக்களிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
2024 தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவதை தடுத்த முதல் தேர்தல் அதிகாரியாக ஷென்னா பெல்லோஸ் அறியப்பட இருக்கிறார்.
ட்ரம்பின் தகுதி குறித்த இதனிடையே ட்ரம்பின் பரப்புரை நிர்வாகிகள் குழு அளித்துள்ள பதிலில், அரசியலமைப்பு குறித்து எங்களுக்கும் அறிவுள்ளது, அமெரிக்க மக்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மைனே மாகாணத்தின் இந்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ட்ரம்ப் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க மிச்சிகன் மற்றும் மினசோட்டா மாகாண நிர்வாகங்கள் மறுத்துள்ளது.
எஞ்சிய மாகாணங்களும் தடை விதிக்கவோ மறுக்கவோ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ட்ரம்பின் தகுதி குறித்த அதிகாரப்பூர்வ தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.