அந்த கொடிய மிருகங்களை தூக்கில் போடுங்கள் :நடிகர் ஜெயம்ரவி!
புதுவை முத்தியால்பேட்டை, சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன், ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஆர்த்தி (9). 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ம்தேதி மதியம் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். பெற்றோர், தேடியும் கிடைக்காததால் முத்தியால்பேட்டை போலீசில் முறையிட்டார். போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். மேலும் 4 தனிப்படை அமைத்து தேடினர். எந்த தகவலும் இல்லாததால் ஆத்திரமடைந்த சோலைநகர் மக்கள் இசிஆரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல்வேறு கட்சிகள், அமைப்புகளும் போராட்டம் நடத்தின.
மாணவியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலையில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. உடனே போலீசார் விரைந்து சென்று தேடினர். இதில் வேட்டியால் சுற்றப்பட்டு அழுகிய நிலையில் ஆர்த்தியின் உடல் கை, கால் கட்டப்பட்டு கிடந்தது. அதை மீட்டு விசாரித்தனர். இதில் விளையாடிக் கொண்டிருந்த மாணவியை கும்பல் நோட்டமிட்டு மறைவான பகுதிக்கு கடத்தி சென்று காலை கட்டி கொலை செய்து, வேட்டியால் உடலை சுற்றி கால்வாயில் வீசியிருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் குரல் கொடுத்து வந்தனர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதுச்சேரியில் போதைப்பொருள் தொடர்பாக நடந்த இந்த கொடூரமான குற்றம், நாம் பல தீமைகளை எதிர்கொள்கிறோம் என்பதை நமக்குப் புரியவைக்கிறது, பாதுகாப்பான சமுதாயமாக, ஒன்றுபட்ட நாடாக ஒன்றுபடுவோம் என்று தன்னுடைய ‘x’ தளத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல் நடிகர் ஜெயம் ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த கொடிய மிருகங்களை தூக்கில் போடுங்கள் என கொந்தளித்து ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.