தனது சினிமா பயணத்திற்கு தகாத வேலையை செய்யும் நடிகர் கவின்- எழுந்த புகார், வருத்தத்தில் ரசிகர்கள்

நடிகர் கவின்
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து இன்று தனக்கான பெயரை சம்பாதித்துள்ளவர் நடிகர் கவின்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து இப்போது தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார். 2017ம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான சத்ரியன் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் கவின்.

அப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த படமும் அமையவில்லை, பின் அவர் தனது நடிப்பை வெளிக்காட்டும் வகையில் வந்த படங்கள் லிஃப்ட், டாடா படங்கள் தான்.

அதிலும் டாடா படத்தின் கதைக்களமும் கவினின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் மிகச்சிறந்த விமர்சனங்களை அவருக்கு பெற்றுத் தந்தது. தற்போது ஸ்டார் படத்தில் நடித்து வருபவர் அடுத்து பிரபல நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் படத்திலும், நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலும் நடிக்கிறார்.

எழுந்த புகார்
சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் கவினின் செயல் குறித்து தயாரிப்பாளர் ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தகுந்த நடிகராக கவின் இல்லை. எப்போதும் படப்பிடிப்பிற்கு தாமதமாக தான் வருகிறார், அப்படி வந்தும் அவரது வேனில் நீண்ட நேரம் இருக்கிறார், சரியான நேரத்திற்கு வருவது இல்லை.

அவர் சரியாக வராமல் இருப்பதால் மற்ற நடிகர்களின் காட்சிகளை படமாக்கிவிட்டு அவருக்காக காத்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது என கூறியிருக்கிறார்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் வளர்ந்து வரும் நடிகருக்கு இது சரியில்லை என பதிவு செய்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *