குறைந்த ரேட்டிங் பெற்ற மாருதி சூசுசுகியின் 5 கார்களின் லிஸ்ட் இதோ..!
Global NCAP என்று குறிப்பிடப்படும் உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின்படி நடத்திய கிராஷ் சோதனைகளின் அடிப்படையில் இந்தியாவில் அதிக சேஃப்டி ரேட்டிங்ஸ்களுடன் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்கள் குறித்த செய்தியை நீங்கள் படித்திருக்கலாம். ஆனால் பாதுகாப்பை பொறுத்தவரை குறைந்த ரேட்டிங்ஸ்களை கொண்ட கார்கள் எவை என்பது உங்களுக்கு தெரியமா?
இந்தியாவில் விற்கப்படும் கார்களின் பாதுகாப்பு தரங்களை மதிப்பிட கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலையில் புதிய சோதனை நெறிமுறைகளை Global NCAP அறிமுகப்படுத்தியது. இந்த புதிய விதிகளின் கீழ் ஆஃப்செட் டிஃபார்மபிள் பேரியர் ஃப்ரன்ட்டல் இம்பேக்ட் டெஸ்ட், சைட் இம்பேக்ட் டெஸ்ட், போல் சைட் இம்பேக்ட் டெஸ்ட், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு (pedestrian protection) சோதனை உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும், அதிக ஸ்டார் ரேட்டிங்ஸை பெற்ற வாகனங்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி கன்ட்ரோல் (ESC) கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே குளோபல் என்சிஏபி-யின் புதிய சோதனை நெறிமுறைகளின் கீழ் மாருதி சுசுகி நிறுவனத்தின் 5 கார்கள் மிகக் குறைந்த பாதுகாப்பு ரேட்டிங்ஸை பெற்றுள்ளன.
மேலும், அதிக ஸ்டார் ரேட்டிங்ஸை பெற்ற வாகனங்களுக்கு எலெக்ட்ரானிக் ஸ்டபிளிட்டி கன்ட்ரோல் (ESC) கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே குளோபல் என்சிஏபி-யின் புதிய சோதனை நெறிமுறைகளின் கீழ் மாருதி சுசுகி நிறுவனத்தின் 5 கார்கள் மிகக் குறைந்த பாதுகாப்பு ரேட்டிங்ஸை பெற்றுள்ளன.
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ: இந்த காரும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் சிங்கிள் ஸ்டாரையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஜீரோ ஸ்டாரையும் பெற்றுள்ளது. இந்த கார் அடல்ட் சேஃப்ட்டி செக்மென்ட்டில் 34-க்கு 20.03 பாயிண்ட்ஸ்களையும், சைல்ட் ப்ரொட்டக்ஷன் கேட்டகிரியில் 49-க்கு 3.52 பாயிண்ட்ஸ்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ 4.26 லட்சம் முதல் ரூ 6.11 லட்சம் வரை செல்கிறது.
மாருதி சுசுகி வேகன்ஆர்: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் வேகன்ஆர் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆனால் இந்த காரின் Global NCAP சேஃப்ட்டி ரேட்டிங் நம்மை அதிர வைக்கிறது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34-க்கு 19.69 பாயிண்ட்ஸ்களை மட்டுமே பெற்று சிங்கிள் ஸ்டாரை பெற்றுள்ளது. அதே நேரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில் 49-க்கு வெறும் 3.40 பாயிண்ட்ஸ்களை மட்டுமே பெற்று ஜீரோ ஸ்டாரை பெற்றது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.5.54 லட்சம் முதல் ரூ.7.37 லட்சம் வரை இருக்கிறது.
மாருதி சுசுகி ஸ்விஃப்ட்: ஸ்விஃப்ட் காரானது வேகன்ஆரை விட சற்றே சிறப்பான ரேட்டிங்கை பெற்றிருக்கிறது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 34-க்கு 19.19 பாயிண்ட்ஸ்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49-க்கு 16.68 பாயிண்ட்ஸ்களையும் பெற்று முறையே இரண்டு செக்மென்ட்டிலும் சிங்கிள் ஸ்டாரை பெற்றுள்ளது. ரூ 5.99 லட்சம் முதல் ரூ 9.03 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் இந்த கார் விற்கப்படுகிறது.
மாருதி சுசுகி ஆல்டோ கே10: ஆல்டோ K10 கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் 34-க்கு 21.67 பாயிண்ட்ஸ்களை பெற்று 2 ஸ்டார்களை பெற்றுள்ளது. அதே நேரம் இந்த கார் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பிரிவில் 49-க்கு 3.52 பாயிண்ட்ஸ்களை மட்டுமே பெற்று ஜீரோ ஸ்டாரை பெற்றுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3.99 லட்சத்தில் தொடங்கி ரூ.5.96 லட்சம் வரை செல்கிறது.