புதிய ஹூண்டாய் கிரெட்டா-N லைன் காரை முன்பதிவு செய்வது எப்படி? வழிமுறைகள் இதோ

வருகிற மார்ச் 11-ம் தேதி இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக ஹூண்டாய் கிரெட்டா-N லைன் கார் அறிமுகமாகிறது. I20 மற்றும் வீனுயூ-க்குப் பிறகு ஹூண்டாய் நிறுவனத்திலிருந்து மூன்றாவது N வரிசை காராக இது அறிமுகமாகிறது. வழக்கமான கிரெட்டா மாடலை விட N வரிசையில் காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதோடு ஸ்போர்டிவான லுக்கில் உள்ளது.

N8 மற்றும் N10 என இரண்டு வேரியண்டுகளில் வரும் ஹூண்டாய் கிரெட்டா-N லைன், 2024 கிரெட்டா மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்சின் தான் இதிலும் உள்ளது. இதற்கு தோதுவாக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் DCT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் வசதி உள்ளது. வெள்ளை, கருப்பு மற்றும் கிரே மேட் என மூன்று நிறங்களில் ஹூண்டாய் கிரெட்டா-N லைன் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி நீல நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை, சாம்பல் நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை மற்றுக் வெள்ளை நிறத்துடன் கருப்பு நிற மேற்கூரை என மூன்று டூயல் டோன் வண்ணங்களிலும் இந்தக் கார் கிடைக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா-N லைன் காரை எப்படி முன்பதிவு செய்ய வேண்டும்?

வியாழக்கிழமையிலிருந்து முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இரண்டு வழிகளில் இதனை நீங்கள் முன்பதிவு செய்துகொள்ள முடியும். ஒன்று, நேரடியாக ஹூண்டாயின் அதிகாரப்பூர்வ ஷோரூம் சென்று ரூ.25,000 செலுத்தி ஹூண்டாய் கிரெட்டா-N லைன் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் முன்பதிவை ரத்து செய்யும்பட்சத்தில் உங்கள் தொகை திருப்பி அளிக்கப்படும்.

இரண்டாவது ஆப்ஷன் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வது. ஆர்வமிக்க வாடிக்கையாளர்கள் இந்த வழிகளை பின்பற்றி ஹூண்டாய் கிரெட்டா-N லைன் காரை புக் செய்யுங்கள்.

1. முதலில் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் Click2Buy ஆன்லைன் தளத்திற்கு செல்லவும்.
2. பின்னர் உங்களுக்கு பிடித்த கார் மாடலை தேர்வு செய்யுங்கள். இதில் நீங்கள் கிரெட்டா-N லைனை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து எரிபொருள் பிரிவில் பெட்ரோலை தேர்வு செய்யுங்கள்.
3. அதற்கடுத்து ஹூண்டாய் கிரெட்டா-N லைன் காரின் எட்டு வேரியண்டுகள் உங்கள் முன் காட்சிப்படுத்தப்படும். அதில் ஒன்றை தேர்வு செய்த பின் வாகனத்தின் நிறத்தை தேர்வு செய்யுங்கள்.
4. இப்போதுதான் மிகவும் முக்கியமான பகுதிக்கு வந்துள்ளீர்கள். அதாவது உங்களுக்கு விரும்பிய டீலர்ஷிப்பை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு உங்கள் மாநிலம், நகரம் மற்றும் டீலர் பெயரை ஒவ்வொன்றாக தேர்வு செய்ய வேண்டும். உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள டீலர்ஷிப் பெயரை எப்போதும் தேர்வு செய்யுங்கள்.

5. கடைசியாக Proceed என்ற பட்டனை க்ளிக் செய்து ரூ.25,000 முன்பதிவு தொகையை ஆன்லைன் வழியாக செலுத்துங்கள்.
6. அவ்வளவுதான் உங்கள் முன்பதிவு நிறைவுற்றது. நீங்கள் முன்பதிவு செய்த தேதியிலிருந்து குறைந்தது ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை கார் டெலிவரிக்காக காத்திருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *