காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்த பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக, அசாம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளார். காசிரங்கா சென்ற பிரதமர் மோடிக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பிட்ட இந்த தேசிய பூங்காவில் காண்டா மிருகங்கள், 600 வகையான பறவை இனங்கள் உள்ளன. இவை தவிர்த்து டால்பின்கள், அதிகளவிலான புலிகள் இந்த பூங்காவில் உள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் மற்றும் பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் காசிரங்கா உயிரியல் பூங்காவில் ஒற்றை கொம்பு வைத்த காண்டாமிருகங்கள் அதிகம் வசிக்கின்றன. உலகில் உள்ள 3-ல் 2 பங்கு காண்டாமிருகங்கள் காசிரங்கா பூங்காவில்தான் உள்ளன. குறிப்பிட்ட இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவால் கடந்த 1985ஆம் ஆண்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

தேசத்தின் 4 பக்கங்களுக்கும் 10 நாள் பயணமாக செல்லும் பிரதமர் மோடியின் 12 மாநில பட்டியலில் அசாமும் இடம்பிடித்துள்ளது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, மக்களை சந்திக்கும் முன்பாக, காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள யானை சவாரி சென்றார்.

தின்சுக்யா மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்கும் மோடி, சிவசாகர் மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டி வைக்கிறார். மேலும் திக்போய் எண்ணெய் சுத்தீகரிப்பு நிலையத்தின் விரிவாக்கத் 768 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இவை தவிர, 5.5 லட்சம் பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் கிரக பிரவேச திட்டத்தின் மூலம் வீடுகளையும் அளிக்க இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியின் அசாம் பயணம் பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *