ராபிடோ போன்ற பைக் டாக்ஸி சேவைகளுக்கு ஆப்பு வைத்த அரசு! ஓலா, உபேர் டிரைவர்கள் செம ஹேப்பி!

கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் பைக்குகளில் டாக்ஸி சேவை நடத்துவதை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு இல்லாததன் காரணமாக இந்த தடையை பிறப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் பைக்குகளில் ஏன் டாக்ஸி சேவை நடத்தக்கூடாது என அம்மாநில அரசு விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

இன்று உள் நகர போக்குவரத்திற்காக தனியார் டாக்ஸி சேவைகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பல்வேறு வகையான டாக்ஸி சேவைகள் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. கார் ,ஆட்டோ மட்டும் அல்லாமல் பைக் டாக்ஸி கூட தற்போது பயன்பாட்டில் வந்து விட்டது. இது சட்ட ரீதியாக சரியானதா இல்லையா என்ற விவாதம் நடந்து வரும் நிலையில் இந்த சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் பைக் டாக்ஸிகளுக்கான ஸ்கீம் ஒன்றை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் பைக்குகளை டாக்ஸி சேவைகளுக்காக சில தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன. இது நீண்ட காலமாக பெரும் சர்ச்சையாக இருந்து வந்தது.

பைக் டாக்ஸி செயல்படுவதால் ஆட்டோ, கார் டாக்ஸி போன்ற சேவை நிறுவனங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. பைக் டாக்ஸி நிறுவனங்கள் சட்ட விதிமுறைகளை மீறி இதை இயக்கி வருவதால் தாங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அப்போதைய மாநில அரசு எலெக்ட்ரிக் பைக் சேவைகளுக்காக பயன்படுத்தும் புதிய திட்டம் ஒன்றை சட்டரீதியாக அமல்படுத்தியது. அதை பயன்படுத்தி பல தனியார் ஆப் அடிப்படையிலான நிறுவனங்கள் மோட்டார் வாகன சட்டத்தை மீறி டூவீலர்களை போக்குவரத்து வாகனங்களாக பயன்படுத்த தொடங்கினார்கள். மேலும் இந்தத் திட்டத்தால் வரி வசூல் என்பதும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்த கர்நாடக மாநில அரசு தற்போது பெண்களுக்கு இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக தற்போது அறிவித்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் பைக்குகளில் இனி யாரும் பைக் டாக்ஸி சேவைகளை நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஓலா உபேர் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் சங்க தலைவர் தன்வீர் பிரெஸ்ஸா கூறும் போது: ” கர்நாடக மாநில அரசின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். 2021-ம் ஆண்டு பாஜக அரசு இருந்தபோது எலெக்ட்ரிக் பைக்,டாக்ஸி சேவைகளுக்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதற்கு நாங்கள் அப்பொழுது எதிர்ப்பு தெரிவித்தோம். எங்கள் எதிர்ப்பையும் மீறி இந்த அனுமதி என்பது வழங்கப்பட்டிருந்தது.

அப்பொழுதே நாங்கள் அரசிடம் சென்று இந்த திட்டத்தால் ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இருந்தாலும் இது வாபஸ் வாங்கப்படாமல் இருந்தது. தற்போது உள்ள கர்நாடக மாநில அரசு இந்த திட்டத்தை வாபஸ் வாங்கியுள்ளது இதனால் தற்போது டாக்ஸி டிரைவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

பைக் டாக்ஸி சேவைகள் என்பது பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. நீண்ட தூரம் பெண்கள் மட்டும் தனியாக தெரியாத நபருடன் பைக்கில் செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமா நடக்கிறது. இதனால் பைக் டேக்ஸி சேவையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *