நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த 3 பால் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது!
இந்தியாவில் நீரிழிவு நோய் தற்போது மிகவும் பொதுவான ஒன்றாக மாறி உள்ளது. நீரிழிவு நோய் என்பது உடல் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்த பிரச்சனையில் போராடி வருகின்றனர். நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி உணவு பழக்க வழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிட வேண்டும். இதுபோதுன்ற சூழ்நிலையில், தினசரி பால் குடிப்பது நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் எந்த எந்த நேரத்தில் பால் உட்கொள்ள வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள், டைப் 2 நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் பால் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என்று கூறுகின்றனர். பால் குடிப்பது கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை குறைக்கிறது மற்றும் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. சில ஆய்வுகள் குறைந்த கொழுப்புள்ள பால் டைப் 2 நீரிழிவுக்கான ஆபத்தை குறைக்கும் என்று கூறுகின்றன. குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் இருதய நோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், பெருங்குடல் புற்றுநோய், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, உடல் பருமன் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட பிற சுகாதார பிரச்சனைகளுக்கும் பயனுள்ளதாக உள்ளது. சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த பால் வகைகளை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் பால்
மஞ்சள் என்பது இந்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மசாலா ஆகும். மஞ்சள் ‘இந்திய குங்குமப்பூ’ அல்லது ‘தங்க மசாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. மஞ்சளின் கலவை பல நோய்களை எதிர்த்துப் போராடுவதில் மிகவும் உதவுகிறது. மஞ்சள் பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் ஒரு வரப்பிரசாதம் என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் உள்ளன. அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மஞ்சளில் காணப்படுகின்றன, இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
இலவங்கப்பட்டை பால்
இலவங்கப்பட்டை இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் சமையலறை மசாலா ஆகும். இது அதன் இனிப்பு, நுட்பமான சுவை மற்றும் வாசனைக்கு பெயர் பெற்றது. இலவங்கப்பட்டை நீர் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது மற்றும் நீரிழிவு நோயை இயற்கையாக கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இலவங்கப்பட்டை பால் மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும். குறிப்பாக சிலோன் இலவங்கப்பட்டை அதன் ஆரோக்கியம் மற்றும் சக்திவாய்ந்த மருத்துவ நன்மைகளுக்காக அறியப்படுகிறது. இந்த மசாலா பல பழங்கால மருந்துகளில் பல நோய்களைக் குணப்படுத்தவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.
பாதாம் பால்
பாதாம் பாலில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் வைட்டமின் டி, வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மக்கள் பல்வேறு காரணங்களுக்காக பாதாம் பாலை விரும்பி குடிக்கின்றனர். பாதாம் பாலில் கால்சியம் நிறைந்துள்ளது. பாதாம் பால் பாஸ்பரஸ், மாங்கனீசு, இரும்பு மற்றும் தாமிரத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும்.