குரூப்-1 பணிகளுக்கு மார்ச் 26 முதல் நேர்காணல்..!

துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிக வரிகள் உதவி ஆணையர் உள்ளிட்ட பதவிகளில் 95 காலி இடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியாகின.

இந்நிலையில், இதில் அடுத்த கட்டதேர்வான நேர்காணல் மார்ச் 26 முதல் 28-ம் தேதி வரை சென்னையில் உள்ளடிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் அறிவித்துள்ளார்.

95 பேர் தேர்வு செய்யப்படுவர்: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நேர்காணல் நாள், நேரம் ஆகிய விவரங்கள், சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும். தபால் மூலம் அனுப்பப்படாது.

நேர்காணல் முடிந்த பிறகு, அதில் பெற்ற மதிப்பெண், மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அதில் இருந்து 95 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

குரூப்-1 தேர்வு மூலம் துணை ஆட்சியர் பதவியில் சேர்வோர் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரியாகவும், டிஎஸ்பி ஆகிறவர்கள் ஐபிஎஸ்அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம். அவர்களுக்கு தமிழ்நாடு கேடர் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *