R Ashwin 25th Wicket: 100ஆவது டெஸ்ட் – 25 விக்கெட்டுகள் கைப்பற்றி அசைக்க முடியாத சாதனை படைத்த அஸ்வின்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி தற்போது தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 52 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அதிரடியாக விளையாடி இருவரும் சதம் விளாசினர். இதில், ரோகித் சர்மா 103 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சர்ஃபராஸ் கான் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியாக வந்த குல்தீப் யாதவ் 30 ரன்களும், ஜஸ்ப்ரித் பும்ரா 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியாக இந்திய அணி 477 ரன்கள் எடுத்து 259 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து இங்கிலாந்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடியது. இதில், சீரான இடைவெளியில் இங்கிலாந்து வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஜாக் கிராவ்லி ரன் ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பென் டக்கெட் அஸ்வின் பந்தில் கிளீன் போல்டானார். ஆலி போப் 19 ரன்களில் அஸ்வின் பந்தில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது 100ஆவது போட்டியில் விளையாடும் ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியாக சிக்ஸரும், பவுண்டரியும் விளாசினார்.

பேர்ஸ்டோவ் 39 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கடைசியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் கிளீன் போல்டானார். இதன் மூலமாக 13 ஆவது முறையாக பென் ஸ்டோக்ஸை, அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

இதன் மூலமாக இந்த டெஸ்ட் தொடரில் முதல் பந்து வீச்சாளராக அஸ்வின் 25 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து, வந்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றி தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் 36ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.

https://twitter.com/JioCinema/status/1766360934233014614

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *