டாடா சன்ஸ் வேற லெவல் நிறுவனம்.. ஐபிஓ வந்தா உடனே வாங்கிடனும்..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமத்தின் தலைமை ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட், நடப்பு நிதியாண்டின் (FY24) முதல் 10 மாதங்களில் இதன் நிதி நிலைமை கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.

டாடா சன்ஸ் ஐபிஓ குறித்த அறிவிப்புகள் வெளியாகி வரும் வேளையில் இந்நிறுவனத்தின் நிதி நிலை தரவுகள் முதலீட்டாளர்களை இப்போதே ஐபிஓ-வில் முதலீடு செய்ய தூண்டியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை (net debt) ரூ.5,656 கோடி ஆகக் குறைந்துள்ளது. அதே சமயம், இந்நிறுவனத்தின் ரொக்க இருப்பு ரூ.9,516 கோடியாக அதிகரித்துள்ளது.

கேப்பிடலைன் தரவுகளின்படி, 2015-16 ஆம் ஆண்டில் டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.5,132 கோடியாக இருந்தது. ஆனால், மார்ச் 2017 முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை ரூ.14,700 கோடிக்கு மேல் இருந்தது.

2019 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதியில் இது அதிகபட்சமாக ரூ.27,437 கோடியாக இருந்தது. மறுபுறம், டாடா சன்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன் சுமை (gross debt) ஜனவரி 2024 வரை கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்து ரூ.15,173 கோடியாக உள்ளது. இது 2020 ஆம் நிதியாண்டில் (மார்ச் 2019) ரூ.31,363 கோடியாக உச்சத்தை அடைந்திருந்தது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் ரொக்க இருப்பில் ஏற்பட்டுள்ள திடீர் உயர்வு இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப முதலீடுகளுக்கு வழி வகுக்கும், குறிப்பாக செமிகண்டக்டர், மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் விமான போக்குவரத்து துறை போன்ற புதிய பிரிவுகளில் டாடா பெரும் முதலீடு செய்யவுள்ளது.

2023-24 ஆம் ஆண்டில் கடன் சுமையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க சரிவு, நிறுவனம் விரைவில் கடன் இல்லாத நிறுவனமாக உருவாகக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பண இருப்பு அதிகரிக்க முக்கியமான காரணம் நஷ்டத்தில் இயங்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளதும், அதே நேரத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற அதன் துணை நிறுவனங்களின் டிவிடென்ட் மற்றும் பைபேக் ஆகியவை கணிசமாக அதிகரித்துள்ளதும் தான்.

கடந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி (RBI) டாடா சன்ஸ் நிறுவனத்தை அப்பர் லேயர் NBFC என வகைப்படுத்தியது. இதன் காரணமாக, செப்டம்பர் 2025க்குள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி, ரிசர்வ் வங்கி டாடா சன்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்களை இந்தப் பிரிவின் கீழ் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *