யூடியூப்-க்கு வேட்டு வைக்கும் எலான் மஸ்க்.. சுந்தர் பிச்சைக்கு தான் இனி கஷ்டம்..!!
சிலையைச் செதுக்குவது போல் எலான் மஸ்க் சமூக வலைத்தளமான X தளத்தைச் செதுக்கி வருகிறார். அடுத்த வாரம் அமேசான் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களுக்கான டிவி ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ஃபார்ச்சூன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்கிய நாளில் இருந்தே வீடியோ கண்டென்ட்-க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, முதலில் ஷாட் வீடியோ, அதன் பின்பு வெர்டிக்கல் ஷாட் வீடியோ, கடைசியாக நீண்ட நேரம் கொண்ட வீடியோ-க்களுக்கான சேவை கொண்டு வரப்பட்டது.
சமீபத்தில் கூடப் பிரபல யூடியூபரான மிஸ்டர் பீஸ்ட், டிவிட்டர் தனது முதல் நீண்ட நேர வீடியோவை பதிவிட்டார். இதில் போதுமான வருமானம் கிடைப்பதாகவும் உறுதியான நிலையில் அதிகப்படியான யூடியூபர்கள் தற்போது long format வீடியோவை பதிவிடத் துவங்கியுள்ளனர்.
டிவிட்டருக்குள் இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் லாங்க் பார்மேட் வீடியோ இரண்டையும் கொண்டு வர வேண்டும் என்பது எலான் மஸ்க் திட்டம், இதைப் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வரும் வேளையில் டிவிட்டரில் தற்போது ஒவ்வொருவரும் செலவிடும் நேரம் அதிகரித்துள்ளது.
இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல நீண்ட நேர வீடியோக்களைப் பெரிய திரையில் பார்க்க மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தொலைக்காட்சிக்கான X செயலி கொண்டு வரப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
எக்ஸ் தளத்தின் இந்தப் புதிய செயலி, யூடியூப் உடன் நேரடியாகப் போட்டியிடவே என்றும் கூறப்படுகிறது. புதிய ஆப், யூடியூபின் டிவியை போன்றே இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் எலான் மஸ்க் லைவ் ஸ்ட்ரீமிங் தளமான ட்விச், மெசேஜிங் ஆப் சிக்னல் மற்றும் சமூக வலைத்தள Reddit போன்ற சேவைகளுடனும் டிவிட்டரில் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது என ஃபார்ச்சூன் இதழ் தெரிவித்துள்ளது.
X தளத்தை everything app ஆக மாற்றும் இலக்கை கொண்டு இருக்கும் எலான் மஸ்க், ஸ்மார்ட் டிவிக்களை தாண்டி, வீடியோ கேம்கள், பாட்காஸ்ட் மற்றும் பெரிய பதிவு ஆகியவற்றையும் இத்தளத்தில் கொண்டு வர ஆய்வு செய்து வருகிறது.
X தளத்தை “வீடியோ முதன்மை தளமாக” மாறுவதற்கான முயற்சியில், முன்னாள் ஃபாக்ஸ் கமெண்டேட்டர் டக்கர் கார்ல்சன் மற்றும் முன்னாள் CNN ஆங்கரர் டான் லெமன் போன்ற பிரபலங்களுடன் X கூட்டணி அமைத்து வருகிறது.