AUSvsPAK.. 18 ரன் 5 விக்கெட்.. பறிபோன 28 வருட வரலாற்று வாய்ப்பு.. பாகிஸ்தானால் புள்ளி பட்டியலில் இந்தியா மேலும் பின்னடைவு.!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது, இந்த நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில் வெற்றி தவறவிட்டுள்ளது.
மார்னஸ் லாபுசாக்னே அரை சதத்துடன், மற்ற வீரர்களின் சிறிய பங்களிப்புடன், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில், அமீர் ஜமால் 3 விக்கெட்வும், ஷஹீன் ஷா அப்ரிடி, மிர் ஹம்சா, மற்றும் ஹசன் அலி, தல இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில், தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக், மற்றும் கேப்டன் ஷான் மசூத் அரை சதம் அடித்தனர். மற்ற வீரர்களின் பங்களிப்புடன் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 264 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்களை கைப்பற்றினார். அவருக்கு உறுதுணையாக நாதன் லியோன் 4 விக்கெட் வீழ்த்தினார்.
64 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங் தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கத்திலேயே பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். உஸ்மான் கவாஜா, மற்றும் மார்னஸ் லாபுசாக்னே, ஷஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சிலும், டேவிட் வார்னர், மற்றும் டிராவிஸ் ஹெட் மிர் ஹம்சா பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தடுமாறி ஆஸ்திரேலியா அணியை, ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் மார்ஷ், மற்றும் அலெக்ஸ் கேரின் அரை சதத்தின் உதவியுடன், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் 262 சேர்த்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 96 ரன்கள் குவித்தார். ஷஹீன் ஷா அப்ரிடி, மற்றும் மிர் ஹம்சா 4 விக்கெட்களையும், அமீர் ஜமால் 2 விக்கெட்வும் கைப்பற்றினார்கள்.
317 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து ஏமாற்றிய நிலையில், கேப்டன் ஷான் மசூத் 60 ரன்களும், பாபர் அசாமின் 41 ரன்களும், வெற்றி நோக்கி அழைத்து சென்றது.
அடுத்து வந்த சவுத் ஷகீல் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார். பாகிஸ்தான் அணி, 162 ரன்களுக்கு 5 விக்கெட் என தடுமாறிய நிலையில், விக்கெட்கீப்பர் முகமது ரிஸ்வான், மற்றும் ஆகா சல்மான் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பாக அரை சதத்தை கடந்தனர்.
வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணிக்கு, அதிர்ச்சியாக அணியின் ஸ்கோர் 219 ரன்னில், முகமது ரிஸ்வான் 35 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதைத்தொடர்ந்து அமீர் ஜமால், மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி வந்த வேகத்திலேயே, ரன்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.
பாகிஸ்தான் வெற்றிக்காக போராடிய ஆகா சல்மான் அரை சதம் அடித்த ஆட்டம் இழக்க, கடைசி விக்கெட்டாக மிர் ஹம்சா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி சார்பில், முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய கேப்டன் பாட் கம்மின்ஸ், இரண்டாவது இன்னிங்சிலும் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெடுகளை கைப்பற்றினார்.
28 வருடங்களுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வெற்றி பெற அருமையான வாய்ப்பு, பாகிஸ்தான் அணிக்கு இருந்த போதும், கடைசி 5 விக்கெட்களை 18 ரன்களுக்கு இழந்து வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 42 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது, இதனால் இந்திய அணி 14 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சவுத் ஆப்பிரிக்கா அணி 12 புள்ளிகளுடன் 100% வெற்றியுடன் முதலிடத்திலும், நியூசிலாந்த அணி 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
பங்களாதேஷ் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 22 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, மற்றும் ஸ்ரீலங்கா அடுத்தடுத்த இடங்களில் பட்டியலில் உள்ளனர்.