வெறும் தோசை வேண்டாம்; இனி கார முட்டை தோசை செய்யலாமே…!
பொதுவாகவே காலையில் தோசை அல்லது இட்லி சாப்பிடுவது வழக்கம். எப்போதும் ஒரே மாதிரி தோசை சுட்டு சாப்பிடமால் எப்போதாவது வித்தியாசமாக செய்து சாப்பிடலாமே.
எனவே முட்டை வைத்து கார தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள். இதை மிகவும் சுலபமாக செய்யலாம். அதை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – 20
பூண்டு – 12 பற்கள்
சின்ன வெங்காயம் – 15
கல்லுப்பு – 1 தேக்கரண்டி
புளி
மிளகாய் ஊறவைத்த தண்ணீர்
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம்
தோசை மாவு
நெய்
முட்டை
உப்பு
மிளகு தூள்
வெங்காயம் நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
முதலில் கார சட்னி செய்ய மிக்ஸியில் ஊறவைத்த மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், கல்லுப்பு, புளி, மிளகாய் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு சிறிய பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு, சீரகம் ஆகியவற்றுடன் அரைத்த கார சட்னியை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
அடுத்து சூடான தோசை கல்லில் தோசை மாவை ஊற்றி வழக்கம் போல் சுடவும்.
பிறகு தாளித்த கார சட்னியை தோசை மீது சேர்த்து வேக வைக்கவும்.
இறுதியாக அடித்த முட்டையை ஊற்றி அதன் மீது உப்பு, மிளகு தூள், நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி தூவி சிறிது நெய் சேர்த்து மிதமான தீயில் வேக வைத்து எடுத்தால் சுவையான கார முட்டை தோசை தயார்!